ஆம்ஸ்டராங் கொலை குற்றவாளி மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது எப்படி?

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை காவல் துறையினர் இன்று காலை என்கவுண்டர் செய்துள்ளனர்.

Written by - RK Spark | Last Updated : Jul 14, 2024, 12:47 PM IST
  • என்கவுண்டர் செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி.
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் அதிரடி.
  • மாதவரம் பகுதியில் அதிகாலை சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஆம்ஸ்டராங் கொலை குற்றவாளி மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது எப்படி? title=

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவான குன்றத்துறை சேர்ந்த திருவேங்கடம்(30) என்பவரை இன்று அதிகாலையில் போலீசார் புழல் அருகே வைத்து என்கவுண்டர் செய்துள்ளனர். என்கவுண்டர் செய்யப்பட்ட திருவெங்கடம் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர், இவர் ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி தென்னரசு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தவர். தற்போது பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையிலும் இவர்தான் திட்டம் தீட்டி கொலை அரங்கேற்றம் செய்ய உறுதுணையாக இருந்ததாக தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | என்கவுன்டரில் சந்தேகம்...!! கைவிலங்கு போடாதது ஏன்...? - ஈபிஎஸ் பரபரப்பு கேள்வி

இந்தநிலையில்தான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தி ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு திருவெங்கடத்தை போலீசார் அழைத்துச் சென்றபோது அவர் போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடி உள்ளார்.இதையடுத்து அவரை போலீசார் அந்த பகுதி முழுவதும் தேடி வந்துள்ளனர். அப்போது மாதாவரம் பகுதியில் வெஜிடேரியில் வில்லேஜ் என்ற பகுதியில் தனியாக ஒரு தகர கொட்டகை ஒன்று இருந்துள்ளது, அதில் ரவுடி திருவெங்கடம் பதுங்கிதால் அதனை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். பின்னர் போலீசார் திருவேங்கடத்தை வெளியில் வந்து சரணடையுமாறு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் அவர் அருவாள் உள்ளிடட ஆயுதங்களை கையில் வைத்திருக்கலாம் என போலீசார் எண்ணி உள்ளனர் இந்தநிலையில் அவர் திடீரென துப்பாக்கியை கொண்டு காவல் ஆய்வாளர் முகமது புகாரியை சுட முயன்றதாகவும், இதனால் அதிர்ச்சடைந்த காவல் ஆய்வாளர்கள் தற்காப்புக்காக முகமது புகாரி மற்றும் காவல் ஆய்வாளர் சரவணன் ஒரே நேரத்தில் துப்பாக்கியில் சுட்டதில் ரவுடி திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது. இதையடுத்து உடனடியாக அவரது உடலை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் இதுயடுத்து அவரது உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காகதான் திருவெங்கடத்தை அழைத்து சென்றதாகவும் அந்த சமயத்தில் அவர் தப்பி ஓடி மறைத்து வைத்திருந்த துப்பாக்கி எடுத்து தாக்குதல் நடத்த முயன்றதாகவும் அதன் அடிப்படையில் தற்காப்புக்காக அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் அவரது உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின்பு என்கவுண்டர் சம்பந்தமாக  காவல்துறையினர் இடமும் விசாரணைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்கவுண்டர் செய்யப்பட்டார் திருவேங்கடத்தின் மீதுள்ள வழக்குகள்

என்கவுண்டர் செய்யப்பட்டுள்ள திருவேங்கடத்தின் மீதான வழக்குகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது, 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றும் 2015ல் திருவள்ளூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகி தென்னரசு கொலை செய்யப்பட்ட வழக்கிலும் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இரண்டு கொலைகளில் திருவேங்கடம் மீது 8 பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் இவர் குன்றத்தூர் பகுதியில் சேர்ந்தவர் என்பதால் குன்றத்தூர் காவல் நிலையத்தில் 2011, 2013, 2018 ஆண்டு இவர் மீது கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி தென்னரசு கொலை வழக்கில் முக்கிய புள்ளியாக இருந்த திருவேங்கடம் தற்போது ஆர்ம்ஸ்ட்ரான் கொலை வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டுள்ளார். இவர் தான் கொலை திட்டத்திற்கு சதி திட்டம் தீட்டி ஒரு மாதம் காலமாக ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்டு கொலை அரங்கேற்றம் செய்ய உறுதுணையாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News