Coimbatore DIG Vijayakumar Suicide: ஐபிஎஸ் அதிகாரியான விஜயகுமார் கடந்த 2009ஆம் ஆண்டு ஐபிஎஸ் ஆக தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் சேர்ந்தார். இதனையடுத்து கடலூர், காஞ்சிபுரம் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனிடையே சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் அடிப்படையில் தான், கடந்த ஜனவரி 6ஆம் தேதி மேற்கு மண்டல காவல்துறை துணைத் தலைவராக விஜயகுமார் பொறுப்பேற்று கோவைக்கு வந்தார். இந்நிலையில் இன்று காலை கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் (வீட்டில்) திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. 


 முதற்கட்ட விசாரணை


அப்போது அங்கு ஓடி சென்று பார்த்த காவலர்கள் டிஐஜி விஜயக்குமார் தன்னைதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்டுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அவர் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


விஜயகுமார் இன்று காலை 6 மணிக்கு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் எனவும் காலை 6 மணிக்கு நடைபயிற்சி முடித்து விட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த அவர், மெய் பாதுகாவலர் ரவி என்பவரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. 


துணை ஆணையர் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் நேற்றிரவு விஜயகுமார் கலந்து கொண்டுள்ளார்.  கடந்த 2 நாட்களாக விஜயகுமார் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, கடந்த 2 வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது.


முதலமைச்சர் இரங்கல்


டிஐஜி விஜயகுமாரின் உயிரிழப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலினின் இரங்கல்‌ செய்தியில், "கோவை சரக காவல்துறை துணைத்‌ தலைவர்‌ விஜயகுமார்‌, ஐபிஎஸ் இன்று அகால மரணம்‌ அடைந்தார்‌ என்ற துயரமான செய்தியைக்‌ கேட்டு மிகுந்த அதிர்ச்சியும்‌ வருத்தமும்‌ அடைந்தேன்‌. விஜயகுமார்‌ தனது பணிக்காலத்தில்‌ மாவட்டக்‌ காவல்‌ கண்காணிப்பாளர்‌ உள்ளிட்ட பல்வேறு பணிப்‌ பொறுப்புகளில்‌ சிறப்பாகப்‌ பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப்‌ பெருமை சேர்த்தவர்‌. 


அவருடைய இந்த மரணம்‌ தமிழ்நாடு காவல்‌ துறைக்குப்‌ பேரிழப்பாகும்‌. அவருடைய குடும்பத்தாருக்கும்‌ காவல்துறையைச்‌ சேர்ந்த நண்பர்களுக்கும்‌ என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும்‌ ஆறுதலையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌" என குறிப்பிட்டுள்ளார். 



குடும்ப பிரச்னையா அல்லது பணிச்சுமையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அவரின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக கொண்டுசெல்லப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க, தமிழ்நாடு சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் கோவை செல்ல இருப்பதாக டிஜிபி சங்கர் ஜிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. காவல்துறை உயர் அதிகாரியான விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விஜயகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டுசெல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலும் தேனி செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


(தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ