அம்மா உன்ன விட்டு போறதுக்கு `sorry`: ஆசிரியர் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை
கல்லூரியில் ஆசிரியர் திட்டியதற்காக மாணவி பரிதாபமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் திட்டியதால் கல்லூரி மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி மேல ரத வீதி பகுதியை சேர்ந்தவர் இந்து ப்ரியா. இவருக்கு வயது 18. இவர் புளியங்குடியில் உள்ள மனோ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றபோது செல்போன் வைத்திருந்ததாக கூறி கல்லூரி ஆசிரியர் ஒருவர் இந்து ப்ரியாவை திட்டியுள்ளார்.
இதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதிக் கேட்டுள்ளனர். ஆனால் செல்போனை கொண்டு வந்தது மற்றொரு மாணவி, அவரிடம் மன்னிப்பு கடிதம் கேட்கப்படவில்லை.
இதனால் மனமுடைந்த இந்துப்ரியா நேற்று காலையில் அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் படிக்க | காதலன் கண்முன்னே காதலிக்கு பாலியல் வன்கொடுமை: ஒருவர் கைது
கல்லூரியில் நடைபெற்ற சம்பவம் குறித்தும் தன்னை ஆசிரியர் திட்டியது குறித்தும் கடிதம் ஒன்றை மாணவி இந்துப்ரியா எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் . தன்னைத் திட்டிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கல்லூரியில் ஆசிரியர் திட்டியதற்காக மாணவி பரிதாபமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | திமுக தலைமை தொடர்ந்து டார்சர் செய்தால் "தற்கொலை" செய்துகொள்வேன் -எச்சரித்த நிர்வாகி
பிரச்சனை இல்லாத மனிதன் என உலகில் யாரும் இல்லை. பிரச்சனைகள் வரும்போது அவற்றை தீர்க்க வழிகாண வேண்டுமே தவிர, நம்மை தீர்த்துக்கொள்ள நினைக்கக்கூடாது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR