கரூரில் அருகே ஜெகதாபி கிராமம் கூலித் தொழிலாளியை கயிற்றால் கட்டி கொடூரமாக தாக்கிய கோழிப்பண்ணை உரிமையாளரை மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கரூர் மாவட்டம் ஜெகதாபி பகுதியைச் சார்ந்த மணிமேகலை இவரது கணவர் மாரிமுத்து பணியில் கடந்த 2 ஆண்டுகள் காலமாக நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணை வேலை செய்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் கணவாய் பட்டி ஆலந்தோட்டம் சின்னசாமி என்பவரது கோழி பண்ணையில் தானும் தனது கணவர் மாரிமுத்துன் வேலை செய்து வந்த போது, தங்களுக்கு ஊதியம் சர்வர தரவில்லை என புகார் அளித்துள்ளனர். 


மேலும் அவர்கள் புகாரில் கூறியிருந்ததாவது:-


கோழிப் பண்ணையில் ஊதியம் சரிவர தராததால் மேற்படி சின்னசாமி என்பவர் எங்களிடம் வேலை மட்டும் வாங்கி வாங்கிக்கொண்டு ஒரு அடிமையாக நடத்தி வந்துள்ளார். இதனால் நான் எனது கணவர் இருவரும் அங்கிருந்து சொந்த ஊருக்கு செல்கிறோம் என்று சொல்லிவிட்டு இனிமேல் இங்கு வேலைக்கு வர மாட்டோம் என்று கூறிவிட்டு ஜெகதாபிக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 


இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு எனது கணவர் மாரிமுத்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பிறகு தொலைபேசியில் பேசி எனது கணவரை தொடர்பு கொண்டேன். பிறகு அவர் தொலைபேசி ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் சின்னசாமி என்பவர் மற்றும் அவரது மேனேஜர் கிஷோர் குமார் என்பவரது தொலைபேசி எண்ணில் இருந்து எனது கணவர் மாரிமுத்து கட்டி வைத்து அடிக்கும் வீடியோவை எனக்கு அனுப்பி வைத்துள்ளனர் .


மேலும் படிக்க | சத்குருவின் புதிய தமிழ் புத்தகம் 'கர்மா- விதியை வெல்லும் சூத்திரங்கள்' - அறிமுக விழா!


அதன் பிறகு நான் காலையில் வெள்ளியணை காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தேன்.  அந்த புகார் அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை எனது வீட்டிற்கு எனது கணவர் மாரிமுத்துவை சின்னசாமி கிஷோர் கலாராணி மற்றும் அடையாளம் தெரியாதவர்கள் மேலும் இருவர் எனது கணவரை வீட்டிற்கு தரதர என் இழுத்து தகாத வார்த்தைகள் பேசி குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர் 


இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வெள்ளியணை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு தகவல் அறிந்த வெள்ளி அணி காவல்துறையினர் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 


அதனைத் தொடர்ந்து வெள்ளியணை காவல் நிலையத்திற்கு மாரிமுத்துவின் மனைவி மணிமேகலை சென்று பார்த்த பொழுது நாமக்கல் மாவட்டத்திற்கு அழைத்து சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக எனது கணவரை  மீட்டுத் தருமாறு கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.


மேலும் படிக்க | நடந்து முடிந்த த.வெ.க கல்வி விருதுகள் விழா! ஹைலைட்ஸ் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ