தமிழ்நாடு அரசு தேர்வு பணியாளர் மையம் மூலம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு இன்று (மே 7) காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்வர்களுக்கு அதற்கு உண்டான நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலையும், மாலையும் தேர்வு


இன்று காலையில் தேர்வு முடிந்துபின் மதியம் 2 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வுக்கு வரும் தேர்வர்கள், 30 நிமிடம் முன்னதாக தேர்வு மையத்தின் உள் நுழைய வேண்டும் என விதிகள் உள்ளன. அதன்படி, மதியம் 1.30 மணி அளவில் தேர்வு மைய கதவுகள் மூடப்பட்டது. இதனால், 50க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தங்களை தேர்வு மையத்தின் உள்ளே விட கோரி காவல்துறையிடம் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இரு தரப்புக்கும் வாக்குவாதம்


மெல்ல மெல்ல இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றி வந்த நிலையில், திடீரென தேர்வர்கள் நுழைவாயில் கதவை உடைத்து தேர்வு மையத்தின் உள்ளே புகுந்து தேர்வெழுத தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையில் குறைவானோரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால், தேர்வர்களை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.


மேலும் படிக்க | மீஞ்சூர் அருகே விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் பள்ளிக்கு சீல்


விசாரணை


இந்நிலையில், தேர்வு மையத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மைய கண்காணிப்பு அலுவலர் வந்ததும் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் அறிந்து உடனடியாக காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூலியர் சீசர்  தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தற்போது உள்ளே சென்ற மாணவர்களுடன் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலையில் தேர்வர்கள் ஐந்து நிமிடம் தாமதமாக அனுமதித்த நிலையில், தற்போது மட்டும் அனுமதிக்காதது ஏன் என்ற கேள்வியை தேர்வர்கள் எழுப்பியதால் இந்த சர்ச்சை உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


நீீட் தேர்வும் இன்று தான்...


இதுமட்டுமின்றி, இளநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. சென்னை, கோவை, மதுரை, நெல்லை என மாநிலம் முழுவதும் 31 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் 1,47, 583 மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிவரை நடைபெற்றது. இதிலும், தேர்வு மையங்களின் முகவரியில் ஏற்பட்ட குளறுபடி, மாணவர்களிடம் சோதனை உள்ளிட்ட பிரச்னைகள் நீட் தேர்விலும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | தமிழகத்தில் நாளை வெளியாகிறது +2 ரிசல்ட்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ