அதிரவைத்த சம்பவம்: காதலியால் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட காதலன்! விபச்சார பெண் கைது!
Viluppuram Murder Case: சென்னை விமான நிறுவன ஊழியர் துண்டு துண்டாக வெட்டி கொலை? மாஜி காதலியிடம் போலீஸ் விசாரணை கோவளம் அருகே புதைத்த உடலை தோண்டி எடுக்க முடிவு.
Crime Newsd In Tamil: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயந்தன் (29). இவர் சென்னை நங்கநல்லூர் என்.ஜி.ஒ. சாலையில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்து கடந்த 5 ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயந்தன் கடந்த மார்ச் 18ந் தேதி மதியம் நங்கநல்லூர் சகோதரி வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வேலைக்குப் புறப்பட்டு சென்றார். அப்போது பணி முடிந்ததும் அங்கிருந்து சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் போய்விட்டு தான் வருவேன் என்று சகோதரியிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் ஜெயந்தன் அவ்வாறு கூறிவிட்டு சென்று சில நாட்கள் ஆகியும் திரும்பி வரவில்லை. அவருடைய சகோதரி ஜெயந்தனுக்கு செல்போனில் தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து ஜெயந்தன் சகோதரி பழவந்தாங்கல் போலீசில் தனது தம்பி ஜெயந்தனை காணவில்லை என்று புகார் செய்தார். பழவந்தாங்கல் போலீசார் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். ஜெயந்தன் செல்போன் டவர் போன்றவைகளை வைத்து ஆய்வு நடத்திய போது கடைசியாக புதுக்கோட்டை மாவட்டம் செம்மாளம்பட்டி கிராமத்தை காட்டியது. இதையடுத்து தனி படை போலீசார் கடந்த 1ந் தேதி புதுக்கோட்டை சென்று பாக்கியலட்சுமி (38) என்ற பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.
மேலும் படிக்க: ஓடும் ரயிலுக்குள் தீ வைத்த சம்பவம்! தண்டவாளத்தின் அருகே 3 சடலங்கள்!
பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள அந்த பெண் முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்தார். போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் ஜெயந்தனை கொலை செய்து விட்டதாகவும் உடலை துண்டு துண்டாக கூறு போட்டு கடந்த மாதம் 20 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கட்டைப் பை, சூட்கேஸ் ஆகியவற்றில் உடல் துண்டுகளை எடுத்து கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரை அருகே குழி தோண்டி புதைத்து விட்டதாக போலீசாரிடம் திடுக்கிடும் தகவலை கூறினார். மேலும் தனக்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த சங்கர், கோவளத்தை சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் கூறினார்.
மேலும் போலீசாரிடம் பாக்கியலட்சுமி கூறுகையில், பாலியல் தொழிலில் ஈடுபட்டு இருந்த தன்னை ஜெயந்தன் தாம்பரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் முதலில் சந்தித்தார். அதில் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2020ம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். 2021ம் ஆண்டில் நான் ஜெயந்தனை விட்டு பிரிந்து விட்டேன். கடந்த மாதம் 19ந் தேதி ஜெயந்தன் மீண்டும் என்னை பார்க்க வந்த போது தகராறு செய்தார். அதனால் தான் கொலை செய்தேன் என்று கூறினார். இதையடுத்து தனி படை போலீசார் பாக்கியலட்சுமியை கைது செய்து சென்னை பழவந்தாங்கல் அழைத்து வந்தனர். மேலும் பழவந்தாங்கல் போலீசார் பாக்கியலட்சுமியை பெண் போலீசார் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, ஜெயந்தன் உடலை கோவளம் கடற்கரையில் புதைத்த இடத்தை அடையாளம் காட்டுவதாக கூறினார்.
மேலும் படிக்க: கள்ளக் காதல் பிரச்சனையால் எரித்துக் கொலை செய்யப்பட்ட கள்ளக்காதலி!
இதையடுத்து போலீசார் பாக்கியலட்சுமி அடையாளம் காட்டும் இடத்தை பார்வையிட உள்ளனர். பின்னர் வருவாய் துறையினர், மருத்துவக்குழு முன்னிலையில் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருவதாக தெரிவித்தனர்.
திருப்போரூர் தாசில்தார், செங்கல்பட்டு அரசு மருத்துவர் முன்னிலையில் இன்று பாக்கியலட்சுமி அடையாளம் காட்டும் இடத்தில் உடலை தோண்டி எடுக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஜெயந்தன் கொலை நடந்த இடம் புதுக்கோட்டை மாவட்டம் என்பதால் மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலை கைப்பற்றிய பிறகே முழு விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: அதிர்ச்சி! பள்ளியில் காண்டம், மதுபானம்... மாணவிகளின் வகுப்பு அருகே படுக்கையறை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ