Chennai Crime | சென்னையில், ஐடி ஊழியரை தலை, காது, கன்னம், இடது முழங்கால் உள்ளிட்ட பகுதிகளை வெட்டி விட்டு செல்போன் மற்றும் பணம் பறித்துக் கொண்டு ஆட்டோவில் சென்ற வழிபறி கும்பல் ஒரே இரவில் அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி தப்பிச் சென்றது. இதனையறிந்த செம்மஞ்சேரி காவல்துறை இரவோடு இரவாக அந்த கும்பலை துரத்தி பிடித்து கைது செய்தனர். சென்னை OMR சாலை சோழிங்கநல்லூரில் இருந்து ஈசிஆர் சாலை, கே.கே.சாலையில் சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான 25 வயதான ஆகாஷ், அவரது நண்பர் 28 வயதான ஜனகர் ஆகிய இருவரும் கிராம நெடுஞ்சாலையில் உள்ள மதுரை பன் பரோட்டா சாப்பிட்டு விட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்பொழுது ஒரு ஆட்டோவில் அதிவேகமாக வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் திடீரென கிழே இறங்கி இருவரையும் சுற்றி வளைத்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நான்கு பேர் இருவரையும் சுற்றி வளைத்ததும் செய்வதறியாமல் நின்ற இருவரில் ஆகாஷ் தலை, காது, கண்ணம், இடது முழங்கால் உள்ளிட்ட பகுதியில் கத்தியால் வெட்டியும், கட்டையால் அடித்தும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆகாஷ் மற்றும் ஜனகர் இருவரும் பணம் இல்லை என்று கூறியதும் ஆகாஷின் ஒரு Oneplus செல்போன் மற்றும் 2000 பணம் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அப்பொழுது சிறிது தூரத்தில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நபர் அவ்வழியாக வந்தபோது அவரையும் வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி அவரது செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியது அந்த கும்பல்.  உடனே, காப்பாற்றுங்கள் என பாதிக்கபட்ட நபர்கள் கத்தியதில் அருகில் உள்ள மக்கள் ஓடிவர, ஆட்டோவில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் அங்கிருந்து கே.கே.சாலை வழியாக ஈசிஆர் சாலை சென்று பின்னர் மாமல்லபுரம் நோக்கி சென்று கோவளத்தில் வலது புறம் திரும்பி கேளம்பாக்கம் சென்றுள்ளனர். 


கேளம்பாக்கத்தில் செல்போன் பேசியபடி ஒருவர் செல்ல அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது Realme செல்போனையும் பறித்து சென்றுள்ளனர். பின்னர், வண்டலூர் வழியாக சென்று மாங்காடு சென்று பதுங்கியுள்ளனர். சோழிங்கநல்லூரில் வழிப்பறி கொள்ளையர்களால் கத்தியால் தாக்கப்பட்ட ஐடி ஊழியர் சென்னை ஈசிஆர் சாலை கொட்டிவக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றபோது மருத்துவமனையில் இருந்து செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த செம்மஞ்சேரி ஆய்வாளர் கிளாட்சன் ஜோஸ் அவரது தலைமையில் இரவு பணியில் இருந்த செம்மஞ்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ், தலைமை காவலர் ஏகாம்பரம், காவலர் மணி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து வழிப்பறி கொள்ளையர்களை விடிவதற்குள் பிடிக்க வேண்டும் என்று அவர்களை பின் தொடர்ந்துள்ளனர். 


மேலும் படிக்க | Fengal Cyclone: பெஞ்சல் புயலின் லேட்டஸ்ட் அப்டேட்! இந்த பகுதி மக்கள் ஜாக்கிரதை!


சுமார் இரவு 12:30 மணியளவில் நடைபெற்ற சம்பவத்தை தொடந்து அடுத்த அரை மணி நேரத்தில் தனிப்படை அமைத்து ஆட்டோவை தனிப்படை போலீசார் பின் தொடர்ந்துள்னர். ஒரு கட்டத்தில் சென்னை OMR சாலையில் வழிப்பறி செய்த நபர்கள் சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் பதுங்கியபோது தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தபோது போலீசாரை கத்தியால் வெட்ட முயற்சித்துள்ளனர் வழிப்பறி கொள்ளையர்கள். பின்னர் போலீசார் சாமர்த்தியமாக நான்கு பேரையும் கைது செய்து செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் நான்கு பேரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


சென்னையை அடுத்த மாங்காடு, சயத் சாதிக் நகர், 2 வது தெருவை சேர்ந்த 24 வயதான ஷரீஃப், அப்துல் ரசாக், சென்னை கீழ்ப்பாக்கம், காமராஜ் நகர், லட்சுமி தெருவை சேர்ந்த 22 வயதான அப்பாஸ் ஷரீஃப், ஒரு இளம்சிறார் என்பது தெரியவந்தது. ஷரீஃப், அப்பாஸ் ஷரீஃப், அப்துல் ரசாக், இளம்சிறார் ஆகிய நான்கு பெரும் எப்பொழும் ஒற்றுமையாக இருக்க கூடிய நண்பர்கள் எனபதும், ஆன்லைன் உணவு டெலிவரி வேலை செய்வதுபோல் ஷரீஃப் கஞ்சா விற்பனை செய்து வந்ததும், விசாரணையில் தெரியவந்துள்ளது. 


கஞ்சா விற்பனையால் நான்கு பேரிடம் அதிகளவு பணம் புழக்கம் ஏற்பட்ட நிலையில் அதை வைத்து கஞ்சா, பெண்களுடன் உல்லாசம் என வாழ்க்கையை எண்ணி பார்க்க முடியாதளவிற்கு வாழ்ந்து வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் அவர்களிடம் இருந்த பணம் முழுவதும் செலவழிகபட்டதால் மீண்டும் கஞ்சா வாங்கி விற்பனை செய்தால் மட்டுமே கையில் பணம் கிடைக்கும் என்பதால் கஞ்சா வாங்க கூட கையில் பணம் இல்லாததால் கஞ்சா வாங்க தேவைக்கேற்ப வழிப்பறியில் ஈடுபட முடிவு செய்து அப்துல் ரசாக்கின் ஆட்டோவில் நான்கு பெரும் வழிப்பறியில் ஈடுபட சென்றுள்ளனர். 


முதலில் பல்லாவரம் தர்கா சுரங்கப்பாதை வழியாக நடந்து சென்ற ஒருவரின் தலையில் காலி பீர் பாட்டிலால் அடித்து அவரிடமிருந்து ஒரு செல்போனையும், அதே வழியாக சென்றபோது மெடிக்கல் ஷாப் ஒன்றில் இருந்து வெளியே வந்த ஆட்டோ ஓட்டுநரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ஒரு செல்போன், 7000 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 


இருவரிடம் செய்த வழிப்பறி மூலம் கிடைத்த ஒரு செல்போனை விற்பனை செய்தால் ஒருநாள் செலவிற்கு கூட போதாது என்பதால் மேலும் வழிப்பறி செய்ய முடிவு செய்து அங்கிருந்து OMR சாலை சோழிங்கநல்லூர் சென்று முதலில் ஐடி ஊழியர், பின்னர் ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர் என அடுத்தடுத்து கத்தியால் வெட்டியும், கத்தி முனையில் மிரட்டியும் வழிப்பறியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது என போலீசார் கூறினர்.


வழிப்பறியில் ஈடுபட்ட ஷரீஃப் மற்றும் அப்பாஸ் ஷரீஃப், அப்துல் ரசாக் ஆகிய மூவரும், போலீசார் பிடிக்க சென்றபோது தப்பி ஓட முயன்றபோது தடுக்கி கிழே விழுந்து மூவருக்கும் வலது கை எலும்பு உடைந்துள்ளது. மேலும், நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்த செம்மஞ்சேரி குற்றப்பிரிவு ஆய்வாளர் ஷரீஃப், அப்பாஸ் ஷரீஃப், அப்துல் ரசாக் ஆகிய மூவரையும் சோழிங்கநல்லூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளை தாம்பரம் காவல் ஆணையர் பாராட்டியுள்ளார்.


மேலும் படிக்க | Chennai Rains : இதுவரை சென்னையில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 7 இடங்கள்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ