சென்னை வேளச்சேரி நேருநகர் திரு.வி.க.தெருவில் வசித்து வந்தவர் தாய் லட்சுமி (வயது 47) மற்றும் மகன் மூர்த்தி (30). மூர்த்தி குடிபோதைக்கு அடிமையானதால் தினமும் இரவில் குடித்துவிட்டு வீட்டு வருவார். அப்படி ஒரு நாள் இதே போன்று குடித்துவிட்டு தனது தாய்யுடன் சண்டை போட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் இவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், மூர்த்தி, வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் அரிவாமனையை எடுத்து வந்து பெற்ற தாய் என்றும் பாராமல் லட்சுமியின் வயிற்றில் வெட்டினார். மேலும் ஆத்திரம் தீரும் வரையில் தாயின் உடலில் பல இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த லட்சுமி அலறினார். அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை கண்ட மூர்த்தி, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் தரையில் மயங்கி விழுந்த லட்சுமி, சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 


ALSO READ: நாமக்கல்லில் நடுங்க வைக்கும் சம்பவம்: சிறுமி பாலியல் வன்கொடுமை, 12 பேர் கைது


இதையடுத்து தகவலறிந்து அங்கு சென்ற வேளச்சேரி போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மூர்த்தியை அவரது செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது மூர்த்தி, அவரது நண்பர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. 


இதனால் போலீசார் அங்கு சென்று மூர்த்தியை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். சாப்பாடு போட மறுத்த தாயை, மகனே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


ALSO READ: Shocking! 3 வாரங்களில் 5 பெண்களை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன் கைது!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR