NCRB Report: 2021ஆம் ஆண்டில் இந்தியா முழுக்க பதிவு செய்யப்பட்ட கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், பெண்களுக்கெதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் என நாட்டில் அரங்கேறிய பல்வேறு குற்றங்கள் குறித்த பகுப்பாய்வு செய்து தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் தனது அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2021-ஆம் ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டை விட 39.80% அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஓராண்டில் குழந்தைகளுக்கு எதிரான 6,064 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 4465 போக்சோ வழக்குகள். 69 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 99.25% பெண் குழந்தைகள் ஆவார்கள். அதில் தமிழ்நாட்டில் போக்ஸோவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் குறித்து அறிந்துக்கொள்ளுவோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போக்சோவால் பாதிக்கப்பட்டவர்கள்:


2021 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் போக்ஸோவால் பாதிக்கப்பட்டவர்கள் 3459 பேர். 


6 வயதுக்குட்பட்டவர்கள்: 50 பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள்


6 வயது மற்றும் 12 வயதுக்குட்பட்டவர்கள்: 226 பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள்


12 வயதுக்கு அதிகமானவர்கள்: 1389 பெண்கள் மற்றும் 11 சிறுவர்கள் 


16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்: 1770 பெண்களும் 5 ஆண்களும்


சிறார் பாலியல் குற்றங்கள் தொடர்பாக  போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்தம் வழக்குகள் 3433. அதில் 3415 வழக்குகளில் யார் குற்றவாளி என்பது பாதிக்கப்பட்டவருக்குத் தெரியும். அதாவது 99.5% வழக்குகளில் குற்றவாளியின் அடையாளம் தெரியும்.


மேலும் படிக்க: மருத்துவத்துறையில் 4038 பணியிடங்கள் உள்ளன - அமைச்சர் மா.சு அறிவிப்பு


யார் அந்த குற்றவாளிகள்?


292 பேர் குடும்ப உறுப்பினர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாகி உள்ளனர்.


குடும்ப நண்பர்கள், வெளிநபர், பணியிடம், பிற தெரிந்த நபர்கள் மூலம் 956 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


நன்கு தெரிந்த நண்பர்கள், ஆன்லைன் நண்பர்கள், திருமணம் செய்துக்கொள்ளலாம் என ஒன்றாக வசிப்பதன் மூலம் 2167 பேர் பாதிப்படைந்துள்ளனர்.


18 பேர் அடையாளம் தெரியாதவர்கள் மூலம் பாதிப்படைந்து உள்ளதாகக் அறிக்கை கூறியுள்ளது.


குழந்தைகளுக்கு எதிரான குற்றம்:


2021 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 1,49,404 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2020 ஆம் ஆண்டை விட 16.2% அதிகரித்துள்ளது. 2020-ல் 1,28,531 என இருந்த வழக்குகள், 2021-ல் 1,49,404 வழக்குகளாக அதிகரித்துள்ளது. .


பெண்களுக்கெதிரான குற்றங்கள்:


2021 ஆம் ஆண்டில்  பெண்களுக்கெதிரான 4,28,278 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2020ஆம் ஆண்டை விட 15.3% அதிகமாகும்.


மேலும் படிக்க: சிறுநீரை நாக்கால் சுத்தம் செய்... பழங்குடியின பெண்ணை கொடுமை செய்த பாஜக மூத்த தலைவர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ