திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பெண் போலீஸின் சட்டையை கழற்றிவிடுவேன் என கோர்ட்டில் மேஜிஸ்திரேட் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் புதன்கிழமை காலை ஒரு குற்ற வழக்கில் அரசு தரப்பு சாட்சியை திருத்தணி மேஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தியுள்ளார். 


அப்போது வழக்கு ஆவணங்களில் சாட்சியின் பெயர் தவறாக இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து மேஜிஸ்திரேட் கேள்வி எழுப்பியபோது "அவருக்கு பதிலாக இவருக்கு சம்மன் வழங்க வேண்டும்” என்று கவிதா தெரிவித்துள்ளார். 


அதற்கு ஆத்திரமடைந்த மேஜிஸ்திரேட், கவிதாவை “என்னையே எதிர்த்து பேசுகிறாயா? உன் சட்டையை கழட்டிவிடுவேன்” என நீதிமன்றத்தில் அனைவர் முன்னிலையிலும் கூறியதாக புகார் எழுந்துள்ளது.


இது குறித்து காவலர் கவிதா திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் எழுத்துபுபூர்வமாக புகார் அளித்துள்ளார். சாட்சியின் பெயர் தவறாக இருப்பது குறித்து கடிதம் கொடுத்துள்ளதாகவும் ஆனால் அதனை நடுவர் திருப்பி கொடுத்து விட்டதாகவும் அந்த புகாரில் கவிதா குறிப்பிட்டுள்ளார். 


இந்த சம்பவத்தால் தான் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும் மேஜிஸ்திரேட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவிதா புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.


எவ்வளவு முன்னேற்றங்கள் வந்தாலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளும், அத்துமீறல்களும் குறைந்ததாக இல்லை. இந்த குற்றங்களை செய்பவர்களுக்கு இடையில் எந்த பாகுபாடும் இல்லை. படிக்காத பாமரன் முதல் படித்த அதிகாரிகள் வரை அனைவரும் இப்படிப்பட்ட குற்றங்களை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். 


உடலளவில் மட்டுமல்லாமல், மனதளவிலும் பெண்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இந்த வழக்கே ஒரு முக்கிய உதாரணம்!!


ALSO READ:பாலியல் தொல்லை, நகை கொள்ளை: வழக்கறிஞர் செய்யும் வேலையா இது? 


ALSO READ:சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு மருத்துவர்கள் இருவர் கைது 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR