Chennai Latest News: புதுச்சேரியின் முத்தியால்பேட்டை திருவள்ளூவர் நகர், புதுப்பாளையும் தெருவைச் சேர்ந்தவர் செல்வநாதன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் ஆவார். இவர் அரசின் மார்க்கெட் கமிட்டி ஊழியர் என்று தெரிகிறது.  இவருக்கு ஹேமசந்திரன், ஹேமராஜன் என இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு வயது 26 ஆகும். இதில் ஹேமசந்திரன் பிஎஸ்சி தகவல் தொழில்நுட்பம் பட்டப்படிப்பை முடித்து விட்டு டிசைனிங் பணியிலும், ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் பணியிலும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்றிருக்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஏப். 22) காலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை (Liposuction - Fat Removal Surgery) செய்ய முடிவு எடுக்கப்பட்டது. 


அறுவை சிகிச்சை தொடங்கிய சில நிமிடங்களில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். அவருக்கு மாரடைப்பு (Cardiac Arrest) ஏற்பட்டதால் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உயிரிழந்த ஹேமசந்திரனின் குடும்பத்தினர் அவர் சிகிச்சை மேற்கொண்டு தனியார் மருத்துவமனை மீது பம்மல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


மேலும் படிக்க | கோவை வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல திட்டமா? வனத்துறையின் புதிய கட்டுப்பாடுகள்!


யூ-ட்யூப் மூலம்...


இதுகுறித்து சென்னை தாம்பரம் அருகே உள்ள பம்மல் சங்கர் நகர் காவல்நிலையத்தில் உயிரிழந்த ஹேமசந்திரனின் தந்தை செல்வநாதன் (52) சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மருத்துவமனை மீதும், ஒரு மருத்துவர் மற்றும் அவரது உதவியாளர் மீதும் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், 26 வயதான தனது மகன் ஹேமசந்திரன் 150 கிலோ உடல் பருமனை குறைக்க யூ-ட்யூப் மூலம் ஒரு மருத்துவர் ரெலா மருத்துவமனையில் அணுகி ஆலோசனை செய்துள்ளார் என்றும் இதற்கு சுமார் ரூ. 8 லட்சம் வரை செலவழித்திருப்பதாகவும் கூறினார். மேலும், ஆலோசனை மேற்கொண்டு மருத்துவரின் அறிவுறுத்தலின்படி பம்மலில் உள்ள வேறு ஒரு தனியார் மருத்துவமையில் சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அதற்கு ரூ.4 லட்சம் செலவாகியது என்றும் தெரிவித்துள்ளார். 


நடந்தது என்ன?


மருத்துவரின் அறிவுறுத்தலை ஏற்ற ஹேமசந்திரனின் குடும்பத்தினர் சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டு பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி (திங்கட்கிழமை)  காலை 9.30 மணிக்கு ஹேமசந்திரனை அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் புகாரில் தெரிவித்துள்ளனர். பிறகு, காலை 10.15 மணியளவில் ஹேமசந்திரனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும், உடனடியாக ரெலா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றதாகவும் அவரின் தந்தை புகாரில் குறிப்பிட்டுள்ளார்.  


குறிப்பாக, தவறான சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர், மருத்துவரின் உதவியாளர் மற்றும் அந்த தனியார் மருத்துவமனை ஆகிய எதிர்மனுதாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இந்த புகார் மனுவை நேற்று இரவு காவல் நிலையத்தில் அளித்துள்ளனர்.


மேலும் படிக்க | கொதிக்கும் சாலைகள்.. தவிக்கும் மக்கள்..! வேலூரா? வெயிலூரா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ