கடன் தொல்லையால் பக்கத்து வீட்டு பெண்ணை கொலை செய்த இளைஞர்!
கடன் தொல்லையால் பக்கத்து வீட்டில் புகுந்து பெண்ணை கொலை செய்துவிட்டு நகையை கொள்ளையடித்த இளைஞரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை அருகே கடன் தொல்லை காரணமாக பக்கத்து வீட்டில் புகுந்து பெண்ணை கொலை செய்துவிட்டு நகையை கொள்ளையடித்த இளைஞரை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர். கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் இவருக்கு ரேணுகா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் மதியம் மனோகரன் மற்றும் அவரது மகள்கள் இருவரும் வெளியில் சென்று இருந்த நிலையில் ரேணுகா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பின்னர் இரவு வீடு திரும்பியபோது இரத்த வெள்ளத்தில் ரேணுகா சடலமாக கிடந்துள்ளார்.
மேலும் படிக்க | TN 12th results 2024 Updates: 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
அப்போது மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து ரேணுகாவை கொலை செய்துவிட்டு கழுத்தில் அணிந்திருந்த மூன்றை பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை அடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது அப்போது இறந்து போன ரேணுகாவின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் சதீஷ் என்ற இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது சதீஷ் என்பது உறுதி செய்யபட்டது.
இதனை அடுத்து போலீசார் சதீஷை விசாரணை மேற்கொண்டபோது அவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதோடு கடன் சுமை அதிகமாக இருந்ததால் அவரது காரை அடமானம் வைத்திருந்து அதற்கு பணம் செலுத்த முடியாமல் போனதால், பக்கத்து வீட்டில் புகுந்து நகையை திருட சென்றதாகவும் இவரை பார்த்த ரேணுகா, சத்தம் போட்டதால் வெட்டி கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்தை பார்வையிட வந்த ஐஜி பவானிஸ்வரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்துள்ளதாகவும் குற்றவாளியை கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி கேமராக்களை அனைத்து வீடுகளிலும் பொருத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும் படிக்க | மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம்! நெறிமுறைகள் என்னென்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ