சேலம் செய்திகள்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா பொது முடக்கம் அறிவிப்பால் நிறுத்தப் பட்டிருந்த குறைதீர்வு கூட்டம் கடந்த சில வாரங்களாக குறை தீர்வு நாள் முகாமாக நடைபெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று குறை தீர்வு நாள் முகாமில் மனு கொடுக்க வந்த குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே திடீரென தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டம் தம்பம்பட்டி கொக்காங்காடு பகுதியை சேர்ந்தவர் குமார் கடந்த 15 வருடமாக அப்பகுதியில் விவசாயம் செய்து வரும் இவர் தனது தோட்டத்திலேயே குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 


தனது தோட்டத்திற்கு செல்லும் பாதையில் தனக்கு உரிமை இருந்தும் ஆக்கிரமிப்பு காரணமாக பாதையை பயன்படுத்த முடியாத நிலையிருப்பதால் அதற்கு தீர்வுகாண திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு வந்திருந்த குமார் அவரின் தாய் மாரியம்மாள் மற்றும் குமாரின்  இரு பிள்ளைகள் என நால்வரும் திடீரென ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் தங்களது மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.


ALSO READ |  சேலத்தில் சோகம்: மழையால் வீடு சரிந்து சிறுவன் பரிதாப மரணம்



உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து அவர்கள்மீது தண்ணீர் ஊற்றி தீ வைத்துக் கொள்ளலாமல் தடுத்தனர். அதன் பின் சேலம் நகர காவல் நிலையத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய குமார் 15 வருடங்களாக தனது தோட்டத்திலேயே குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் தனக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட பத்திரத்தின்படி தனது தோட்டத்திற்கு பொது வழி இருப்பதாகவும் தனக்கு உரிமை இருந்தும் பக்கத்து தோட்டத்து உரிமையாளர்கள் சாதிய பாகுபாடு காட்டி தங்களை அப்பதையில் நடக்க விடுவதில்லை எனவும் அந்த பாதை ஆக்கிரமிக்கப்பட்டு அதில் அவர்கள் பயிர்செய்வதாகவும் தெரிவித்தார். 


இதை காவல் நிலையத்தில் புகாரளித்தும், முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கை இல்லை என்றும், நேற்று தனது தாய் மரியம்மாளுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டதாகவும் தனது பிள்ளைகள் பள்ளிக்கு செல்லவும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளத்ததாகவும் கூறினார். 


குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ALSO READ | சேலம் ஆனைவாரி அருவி வெள்ளத்தில் சிக்கிய தாயும் சேயும்: பதபதைக்க வைக்கும் வீடியோ



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR