சேலத்தில் சோகம்: மழையால் வீடு சரிந்து சிறுவன் பரிதாப மரணம்

சேலத்தில் மழை பாதிப்பால் நடந்துள்ள ஒரு சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சேலத்தில் ஓட்டு வீடு சரிந்து விழுந்து 5 வயது சிறுவன் ஒருவன் பலியானான்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 12, 2021, 01:15 PM IST
  • சேலத்தில் மழையால் வீடு சரிந்து சிறுவன் சாவு.
  • தாய் தந்தை உள்பட 6 பேர் படுகாயம்.
  • உரிய நடவடிக்கை எடுக்கப்படும்- நிர்வாகிகள்.
சேலத்தில் சோகம்: மழையால் வீடு சரிந்து சிறுவன் பரிதாப மரணம் title=

சேலத்தில் மழை பாதிப்பால் நடந்துள்ள ஒரு சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சேலத்தில் ஓட்டு வீடு சரிந்து விழுந்து 5 வயது சிறுவன் ஒருவன் பலியானான். சிறுவனின் தந்தை தாய் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

பொன்னம்மாப்பேட்டை, சேலம் (Salem) மாநகராட்சி பகுதியில் உள்ளது . இங்குள்ள அல்லிக்குட்டை என்ற பகுதியில் மாரியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் ராமசாமி. இவர் ஒரு தறி தொழிலாளி.

நேற்று இரவு ராமசாமி தனது ஓட்டு வீட்டில் அவரது மனைவி நந்தினி, குழந்தை பால சபரி (வயது ஐந்து) மற்றும் தந்தை ஏழுமலை, அக்காள் காளியம்மாள், காளியம்மாளின் மகன் மாரியப்பன், காளியம்மாளின் மகள் புவனா ஆகியோர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

இன்று காலை 8 மணி அளவில் மழை (Rain) பெய்ததுபோது ராமசாமியின் ஓட்டு வீடு அப்படியே சரிந்து அவர்கள் மீது விழுந்தது. உடனே அனைவரும் அலறி அடித்து வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர். ஆனால் இந்த இடிபாடுகளில் சிக்கி 5 வயது சிறுவன் பால சபரி பரிதாபமாக உயிர் இழந்தான். 

No description available.

ஓட்டு வீடு சரிந்ததால் ராமசாமி மற்றும் அவனது மனைவி நந்தினி உள்ளிட்ட 6 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே இவர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனையில் (Hospital) சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ALSO READ:மறுபடியும் மழையா? சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் கனமழைக்கான வாய்ப்பு! 

வீடு சரிந்ததை அறிந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து வீராணம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து உதவி கமிஷனர் சரவணகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து இடிபாட்டில் கிடந்த சிறுவனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

No description available.

வீடு இடிந்த  விபரத்தை அறிந்த சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், ஆட்சித்தலைவர் விஷ்ணு வர்த்தினி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். 

‘அல்லிக்குட்டை பகுதியில் உள்ள ஏரி நிரம்பி விட்டது . இதன் நீர் வீடுகளுக்குள் புகாமல் இருக்க மாற்று பாதையில் தண்ணீர் திறந்துவிட வேண்டும். அல்லிகுட்டை பகுதியில் சிறிய மழை பெய்தாலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது . மழை நீர்வீடுகளுக்குள் வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

இதனைக் கேட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

ALSO READ:தருமபுரி ரயில் தடம் புரண்டு விபத்து! மழையா? சதியா? போலீசார் விசாரணை! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News