கொரோனாவின் இரண்டாவது அலை அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக சுகாதாரத்துறை ஒன்றிணைந்து சென்னை உள்பட தமிழகம் (Tamil Nadu) முழுவதிலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முயன்றாலும் தினமும் சுமார் 30,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் (Coronavirus) பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


ALSO READ | E-Pass: தமிழகத்தில் இன்று முதல் இ-பதிவு அமல், விண்ணபிப்பது எப்படி


கொரோனா அச்சம் காரணமாக, ரயில்களில் (Railways) பயணிகளின் வருகை தற்போது குறைந்து காணப்படுகிறது. இதனையடுத்து சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து வெளிமாநிலங்களுக்கும் தினந்தோறும் இயக்கப்பட்டு வந்த நூற்றுக்கணக்கான ரயில்களின் பயண சேவை கடந்த சில வாரங்களுக்கு முன்பே ரத்து செய்யப்பட்டுவிட்டது.


இந்நிலையில் தற்போது இந்த வரிசையில் மேலும் இரண்டு தினசரி ரயில்களின் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே (Southern Railway) தெரிவித்துள்ளன. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சிருக்கு நாள்தோறும் இயக்கப்பட்டுவரும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் மே 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.


அதேபோல் எதிர் திசையில் திருச்சியில் இருந்து சென்ன எழும்பூருக்கு இயக்கப்படும் இந்த விரைவு ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை எழும்பூரில் இருந்து மன்னார்குடிக்கு நாள்தோறும் இயக்கப்படும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலும் நாளை முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR