அதிர்ச்சி! பச்சிளம் குழந்தையின் தலையை கவ்வி கொண்டு வந்த நாய்
மதுரையில் நாய் ஒன்று பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் தலையை தூக்கி வந்துள்ளது.
மதுரை செய்திகள்: மதுரை பீ.பீ. குளம் உழவர்சந்தை அருகே பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளங் குழந்தையின் தலையை நாய் தூக்கிவந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை பீ.பீ.குளம் உழவர்சந்தை அருகேயுள்ள இந்தியன் வங்கியில் பணம் எடுப்பதற்காக மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், அந்த பகுதியில் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில், அந்த பகுதியில் நாய் ஒன்று பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் தலையை தூக்கி வந்துள்ளது.
இதனை பார்த்த இளைஞர் காவல்துறைக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் காவல்துறையினர் குழந்தையின் தலையை மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR