மதுரை மாவட்டத்தின் செக்காணூரணியில் மலிவு விலை மருந்தகம் திறப்பு விழாவில் பாஜக தேசிய செயலாளரான ஹெச்.ராஜாக கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்., தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை, பலர் இது குறித்த வந்தந்திகளை பரப்பி வருகிறனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், பேசிய அவர் நடிப்பில் மட்டுமே கமல் (Kamal Haasan) விஷயம் பெரிதாய் தெரியும், பெரியாரை (Periyar) பின்பற்றுவதால் கமல் முட்டாள், கண்டெய்னர், மொபைல் டாய்லெட் என எதைக் கண்டாலும் பயப்படுகிறார் என்றால் இவர் எல்லாம் உலக நாயகனா என்ற சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார். 


ALSO READ | இந்தியன் 2 படத்திற்கு சோதனை மேல் சோதனை: இந்தியன் தாத்தா மீண்டும் வருவாரா? மாட்டாரா?


ஸ்டாலின் முட்டாள் என அனைவருக்கும் தெரியும், அதேபோல் பெரியாரை பின்பற்றுவதாகக் கூறும் கமல்ஹாசனும் முட்டாள் தான் என்றும் இன்றைக்கு முட்டாள்கள் உலகமாக தமிழ்நாடு மாறியுள்ளது என்றும் பாஜக (BJP) தேசிய செயலாளரான ஹெச்.ராஜா (H Raja) கூறியுள்ளார்.


ஹெச்.ராஜாவின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் எச் ராஜாவின் இந்த விமர்சனத்திற்கு கமல்ஹாசன் என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR