ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த இருவர் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் இருந்து விழுப்புரம், திருச்சி வழியாக காரைக்குடிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் சென்று வருகிறது. இந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு மாலை 6.05 மணிக்கு வருவது வழக்கம்.


இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் சென்னையில் இருந்து காரைக்குடிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. 


இந்த ரெயில் விழுப்புரத்தை அடுத்த சிந்தாமணி ரெயில்வே கேட் அருகில் மாலை 6 மணியளவில் வந்தபோது ரெயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த 2 பேர் திடீரென ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் அவர்கள் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.


மேலும் படிக்க | பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு 


உடனே அங்கிருந்த ரெயில்வே கேட் கீப்பர், இதுபற்றி விழுப்புரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  விசாரணை நடத்தினர். 


விசாரணையில் அவர்களில் ஒருவர் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த சோமசுந்தரம் மகன் அருண் (வயது 22) என்பதும், மற்றொருவர் முசிறியை சேர்ந்த 30 வயதான தினேஷ் குமார் என்றும் தெரியவந்தது. 


அவர்கள் இருவரும் சென்னையில் இருந்து திருச்சிக்கு பயணம் செய்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 


பின்னர் அவர்கள் இருவரின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 விழுப்புரம் அருகே ஓடும் ரெயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த 2 பேர் தவறி விழுந்து இறந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | சித்திரை திருவிழாவில் சோகம்; வைகையாற்றில் கூட்டநெரிசலில் சிக்கி 2 உயிரிழப்பு 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!