தந்தையின் சொத்தில் தங்களுக்கு உரிய பங்கைத் தராமல் ஏமாற்றிவிட்டதாக ராம்குமார் மற்றும் நடிகர் பிரபு மீது நடிகர் சிவாஜிகணேசனின் மகள்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் திலகம் என ரசிகர்களால் அழைக்கப்படும் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், பிரபு  என இரு மகன்களும் சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர். சிவாஜி கணேசன் கடந்த 2001ஆம் ஆண்டு காலமானார். பிரபுவும் அவரது மகன் விக்ரம் பிரபுவும் தற்போது சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கின்றனர்.


ராம்குமார் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து செயலாற்றிவருகிறார். இந்நிலையில் இவர்களது குடும்பத்தில் சொத்துப் பிரச்சினை ஒன்று தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.


சிவாஜியின் மகள்களான சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளனர். அதில், பிரபு மீதும் ராம்குமார் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர்கள் தெரிவித்துள்ளனர்.



அதன்படி,  சிவாஜி கணேசனின் மறைவுக்குப் பின்,  270 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ராம்குமாரும் பிரபுவும் முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகைப் பங்கைத் தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் சகோதரிகள் புகாரில் தெரிவித்துள்ளனர்.


இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் 2005ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி, தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளதால் அவற்றைப் பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளனர். அத்துடன், தங்களுக்குத் தெரியாமல் தந்தையின் சொத்துக்களை விற்றுள்ளதாகவும், அந்த விற்பனைப் பத்திரங்களை செல்லாது என அறிவிக்கவேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.


ஆயிரம் சவரன் தங்க நகைகளையும், 500 கிலோ வெள்ளி பொருட்களையும் பிரபுவும், ராம்குமாரும் அபகரித்துக் கொண்டதாகவும், சாந்தி தியேட்டரில் இருந்த 82 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பிரபுவும், ராம்குமாரும் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.



மேலும் படிக்க | அஜித் -61 டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி! வெளியானது புதிய தகவல்!


 


தந்தை சிவாஜி கணேசன் எழுதி வைத்ததாகக் கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது எனவும், பொது அதிகாரப் பத்திரத்தில் கையெழுத்துப் பெற்று தங்களை ஏமாற்றி விட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது மட்டுமல்லாமல் இந்த வழக்கில் நடிகர் பிரபு மற்றும் ராம்குமாரின் மகன்களாக நடிகர் விக்ரம் பிரபு மற்றும் நடிகர் துஷ்யந்த் ஆகியோரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.


மேலும் படிக்க | ஆமா, இது ‘ED’ கூட்டணி ஆட்சிதான்! ஆனா... ‘பொடி’ வைத்துப் பேசிய பட்னாவிஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR