சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: 5 பேர் பலி
சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பட்டாசு ஆலைகளில் அடுத்ததடுத்து விபத்துகள் நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெற்றிலையூரணியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கி மூன்று பெண்கள் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.