வடசென்னையில் திருவொற்றியூர் அருகே விம்கோ நகரை சேர்ந்தவர் காமராஜ். இவர் திமுகவில் இருந்தார். இவர் அரசு ஒப்பந்ததாரரும் கூட. கடந்த வாரம் வியாழக்கிழமை காலை காமராஜ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் காலிங் பெல் அடித்துள்ளது. காமராஜ் உடனே எழுந்து கதவை திறந்துள்ளார். அப்போது வெளியில் பயங்கர ஆயுதங்களுடன் காத்திருந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் காமராஜ் கீழே சரிந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் காமராஜை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 8 நிறுவனங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்


அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட காமராஜ், சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். திமுக பிரமுகர் என்பதால் அப்பகுதியில் கூட்டமும் திரளத் தொடங்கியது. எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று காவல்துறையினர் விசாரிக்க தொடங்கினர். அரசு ஒப்பந்ததாரர் என்பதால் ஏதேனும் முன்பகை இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினர். அத்துடன் உடலைக் கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 


பின்னர், எண்ணூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த சூழலில், காமராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த அரவிந்தன், இளந்தமிழன், தினேஷ், மனோ, காந்தி, ஜமாலுதீன் ஆகிய ஆறு பேர் கொண்ட கும்பல் கடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சரணடைந்த ஆறு பேரையும் நீதிபதி ரகோத்தம்மன் முன் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


மேலும் படிக்க | எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சம்பவம் நடந்திருக்கக் கூடாது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ