ஊருக்குள் படையெடுக்கும் பாம்புகளால் பொன்னமராவதி மக்கள் அச்சம்! ஒரே நாளில் 3 பாம்புகள்
பொன்னமராவதியில் படையெடுக்கும் பாம்புகளால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரே நாளில் 3 இடங்களில் பாம்புகள் பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அம்மா நகரில் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருபவர் பாரத். இவர் பணிக்கு சென்று விட்டு மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த பொழுது ஆறடி நீளம் உள்ள சாரைப்பாம்பு வீட்டிற்கு கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பாரத் உடனடியாக பொன்னமராவதி தீயணைப்புத் துறைனருக்கு தகவல் அளித்தார்.
உடனடியாக நிலைய அலுவலர் சந்தானம் தலைமையில் விரைந்து வந்த பொன்னமராவதி தீயணைப்புத் துறையினர் வீட்டிற்குள் பதுங்கி இருந்த சாரைபாம்பை பிடித்து அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
இதேபோல், அப்பகுதியில் இருக்கும் மற்றொரு வீட்டிற்குள்ளும் பாம்பு புகுந்தது. இதேபோல் அங்கு இருக்கும் கடையிலும் பாம்பு புகுந்தது. இதனை கேள்விப்பட்ட மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். அடுத்தடுத்து 3 இடங்களில் பாம்புகள் மக்கள் வசிக்கும் இடங்களில் பிடிப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மழைக்காலமாக இருப்பதால் பாம்புகள் குடியிருப்புகளை நோக்கி படையெடுப்பதாக கூறப்படுகிறது. காடுகளையொட்டி இருக்கும் மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறு வனத்துறை அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கிரெடிட் கார்ட், UPI பேமெண்ட் செய்பவர்களுக்கு குட் நியூஸ்: அதிகரித்தது வசதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ