மாயமான சமூக செயற்பாட்டாளர் முகிலன் ஆந்திர காவல்துறையினர் பிடியில் இருக்கும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூழலியலாளர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி அன்று சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக மிக முக்கிய வீடியோ ஆவணம் ஒன்றை வெளியிட்டார். மறுநாள் மதுரையில் சில பணிகள் இருந்ததால் அன்றிரவு சென்னை டு மதுரை மகால் விரைவு ரயிலில் அவர் பயணிப்பதாக இருந்தது. சென்னையில் இருந்து புறப்படுவதற்கு முன்பு அவரது நண்பர்கள் சிலர் அவரை எழும்பூர் ரயில் நிலையத்தில் வைத்துச் சந்தித்திருக்கின்றனர்.


அதுமட்டுமல்லாமல், மதுரையிலிருக்கும் நண்பர் ஒருவரிடம் இரவு பத்தரை மணியளவில் பேசிய முகிலன், ‘காலை 11 மணிக்குள் மதுரை வந்துவிடுவேன்’ எனப் போனில் பேசியிருக்கிறார். நள்ளிரவில் முகிலனின் போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.ஆனால், மறுநாள் அவர் மதுரை சென்றடையவில்லை. அதன் பிறகு முகிலன் காணவில்லை .


இதனையடுத்து காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. எழும்பூர் ரயில்வே காவல் இந்த வழக்கை த சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைத்துள்ளது. இதுதொடர்பாக ஆட்கொணர்வு மனுவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.முகிலன் காணாமல் போகி 100 நாள்கள் மேல் ஆகியுள்ளது. இந்நிலையில் தான் முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவரது நண்பர் சண்முகம் கூறியுள்ளார். ஆந்திர போலீஸார் வசம் அவர் இருப்பதாக கூறியுள்ளார்.



இந்நிலையில், சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காணாமல் போனார். இது குறித்து தமிழக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தன. இது தொடர்பாக சிபிசிஐடடி விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முகிலனின் பள்ளித்தோழர் சண்முகம் ஆந்திராவில் உள்ள திருப்பதியில் நேரில் பார்த்ததாக தெரிவித்துள்ளார். திருப்பதி ரயில் நிலையத்தில் உள்ள முதல் மேடையில் முகிலனை பார்த்ததாக தெரிவித்துள்ளார். தாடி வளர்த்திய படி முகிலன் கோஷமிட்டு சென்றதாக தெரிவித்தார். இதனிடையே அதை உறுதி செய்யும் வகையில், ஆந்திர காவல்துறை பிடியில் முகிலன் இருக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.