‘பிரதமர் மோடியின் ஆட்சியை கண்டு அம்பேத்கர் பெருமைப்படுவார்’என்று இளையராஜா கூறியது பெரும் விவாதப் பொருளாக மாறியது. சமூக நீதிக்கு பாதகம் விளைவிக்கும் மோடி தலைமையிலான ஆட்சியை கண்டு அம்பேத்கர் எப்படி பெருமைப்படுவார். இளையராஜா இந்தக் கருத்தை திரும்பப் பெற வேண்டும் என ஒரு தரப்பினர் இளையராஜாவை விமர்சித்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல், கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இளையராஜா தனது மனதுக்கு தோன்றியதை சொல்லியிருக்கிறார் என மற்றொரு தரப்பினர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவரை இளையராஜாவுக்கு தங்களது ஆதரவை அளித்திருக்கின்றனர்.


இதனிடையே சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் தமிழகத்தில் உள்ள சினிமா கலைஞர்களை கைப்பற்ற பாஜக மிகத் தீவிரமாக முயற்சி செய்வதாக விமர்சித்தார். இது தொடர்பாக அவர் பேசியது பின்வருமாறு:-


''அம்பேத்கரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு இளையராஜா பேசியது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? எவ்வளவோ நடிகர்கள், நடிகைகள் பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், அது அனைத்தும் இவ்வளவு கவனத்தை பெறவில்லை. 
 
கலை என்பது எங்கெல்லாம் உள்ளது. யாரிடம் எல்லாம் சென்று சேர்ந்துள்ளது. அந்த கலையின் மதிப்பு என்ன? அதனை படைத்த கலைஞனின் மதிப்பு என்ன? இதெல்லாம் சமூகத்தில் முக்கியமானவைகளாக பார்க்கப்படுகின்றன. 


எனவே கலை மற்றும் கலைஞனின் மதிப்பை பொறுத்து தான் இங்கு அனைத்தும் பார்க்கப்படுகிறது. காரணம், கலையும் கலைஞர்களையும் எப்போதும் பிரித்து பார்க்க முடியாது. இளையராஜா என்பவர் இசையில் புரட்சியை நிகழ்த்தியவர். ஒரு காலத்தில் குறிப்பிட்ட தரப்பினர் மட்டும் சொந்தம் கொண்டாடிய இசையை ஜனநாயகப்படுத்தி அனைவருக்குமானதாக பரவலாக்கியவர் இளையராஜா. 


எனவே, இதுபோன்றதொரு பெரும் கலைஞனை கைப்பற்றுவதன் மூலம் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் சூழ்ச்சியை அரங்கேற்றுவதற்கான வேலை நடந்துகொண்டிருக்கிறது. இதுவரை இளையராஜா அரசியல் ரீதியான கருத்தை இளையராஜா முன்வைத்ததோ அல்லது வேறு சமூக கருத்துகளை தெரிவித்ததோ இல்லை. கடைசி வரை அனைத்து இடங்களிலும், அனைத்து மேடைகளிலும் இசையின் பெருமைகளை பற்றி மட்டுமே இளையராஜா பேசி வந்துள்ளார். 


மேலும் படிக்க | இளையராஜா விவகாரம் வம்புக்கு இழுக்கப்படுகிறதா திமுக


அவரது இசை எங்கிருந்து வருகிறது என்பது மிகவும் முக்கியமானது. அவரது இசை எங்கு தொடங்கியது, தமிழ் சினிமாவுக்கு இளையராஜாவின் இசை எவ்வளவு முக்கியமானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். எனவே, அவர் மூலம் ஒன்றை உருவாக்கவே அம்பேத்கர், மோடி ஓப்பீடு எனும் விவகாரம் கவனம் பெற்றதாக நான் நினைக்கின்றேன். 


இன்னொரு முக்கியமான விஷயம் புத்தகத்தின் முன்னுரையில் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு இளையராஜா எழுதினாரா? என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ஏனெனில் சமூகத்தில் பிரச்னைகளும், பிரிவினைகளும் பெரும் விவாதப்பொருளாகி வருகின்றன. 


இந்த சூழலில் திடீரென இளையராஜாவை பாஜகவும், இந்துத்துவ சக்திகளும் கைப்பற்ற துடிப்பது சந்தேகத்தை எழுப்புகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என தெரிவிக்கின்றார். இவற்றை எல்லாம் ஒப்பிட்டு பார்த்தால் தமிழ்நாட்டில் ஜாதி, மதத்திற்கு எதிராக ஒரு மாடல் உருவாகி வருகிறது. அதனை, இளையராஜாவை வைத்து உடைக்கும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர். இதனை மிகக் கவனமாக நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 


அதேநேரம் கலைஞர்கள் சமூக பொறுப்புடன் இருக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன்.'' இவ்வாறு பா.ரஞ்சித் தெரிவித்தார்.


மேலும் படிக்க | இளையராஜாவை தொலைபேசியில் அழைத்து நன்றி சொன்ன பிரதமர்?


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G