பொதுநலனுக்கு பயன்படும் புரட்சிகரமான செயலி:சமூக ஆர்வலர் ஏ. நாகராஜ் அறிமுகம் செய்து வைத்தார்
தமிழ் நாட்டில் பிரபல சமூக ஆர்வலராக உள்ள நாகராஜ், பொது மக்கள் அனைவருக்கும் உதவி புரியும் வகையிலான ஒரு செயலியை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
பிரபல சமூக ஆர்வலரான நாகராஜ், ராணிப்பேட்டை தொகுதியில் குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் நோக்கில் புரட்சிகரமான மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளார் "RANIPET, PEOPLE'S VOICE" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதுமையான செயலி, உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பொதுமக்கள் அத்தியாவசிய சேவைகளை பெறுவதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பொது நலனில் ஆழ்ந்த அர்ப்பணிப்பு மற்றும் குடிமக்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் நோக்கில், சமூக ஆர்வலர் நாகராஜ், இந்த செயலியை உள்ளூர் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடன் பதில் அளித்தல் மற்றும் பதிலளிக்கக்கூடிய தன்மையை வளர்ப்பதற்கான சக்திவாய்ந்த கருவியாக உருவாக்கியுள்ளார். தொழில்நுட்பத்தின் திறனைப் பயன்படுத்துவதன் மூலம், பயனாளிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கவும், உதவியைப் பெறவும் அவர்களின் சமூகத்தை வடிவமைக்கும் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் தீவிரமாக பங்கேற்கவும் இது உதவுகிறது.
மேலும் படிக்க | DMK FILES பார்ட் 2 யாரை பற்றியது? சூசகமாக சொன்ன அண்ணாமலை!
பயன்பாடு:
குடியிருப்பாளர்கள் தங்கள் குறைகளை இந்த செயலியில் எளிதாகப் பதிவு செய்து நேரடியாக தங்களது கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம். இந்த கோரிக்கைகள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படுவதை செயலி உறுதிசெய்கிறது. இது திறமையான மற்றும் சரியான நேரத்தில் தீர்வு கிடைக்கவும் உதவுகிறது. அர்த்தமுள்ள ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலம், ராணிப்பேட்டை முழுவதும் உள்ள குடிமக்களுக்கு இது பெரிதும் பயனளிக்கும் மேலும் அரசு நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறுவதை இந்த ஆப் நோக்கமாகக் கொண்டுள்ளது.
எதற்காக இந்த செயலி?
நாகராஜ் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புது செயலி குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த செயலி குறித்து அவரே பேசினார். அப்போது, குடிமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை வடிவமைப்பதில் தீவிரமாக ஈடுபடும் அதிகாரம் பெற்ற சமூகத்தை உருவாக்குவதே எங்களது நோக்கம் என்று கூறினார். மேலும், இந்த செயலியானது குடியிருப்பாளர்களின் குரலை நேரடியாக எதிரொலிக்கும் என்றும் அவர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கான தளத்தை வழங்கும் சக்திவாய்ந்த கருவியாக இது செயல்படும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், மக்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க முடியும் என்றும் இதனால் மக்கள் பங்கேற்புடன் கூடிய ஜனநாயகத்தை வளர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இந்த செயலியை தற்போது ஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ராணிப்பேட்டை நகர இந்த செயலி மூலம் குடிமக்கள் இந்த டிஜிட்டல் இயக்கத்தில் சேர ஊக்குவிக்கப்படுகிறார்கள். வலுவான மற்றும் மிகவும் பதிலளிக்கக்கூடிய உள்ளாட்சியை உருவாக்கும் செயல்பாடுகளிலும் அவர்கள் பங்கு வகிக்க உள்ளனர்.
மேலும் படிக்க | இரவிலும் தொடர்ந்த சோதனை! செந்தில் பாலாஜி வீட்டில் சிக்கியது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ