தாய் பாசத்துல KGF படத்த தாண்டிட்டாரு... தாயாருக்கு தாஜ்மஹாலை கட்டிய பாச மகன்!
Tamilnadu Taj Mahal: காதலிக்காக கட்டிய தாஜ்மஹால் அது ஆக்ராவில் இருக்கிறது. தனது தாய் மீதான அன்பால் மகன் தாஜ்மஹால் கட்டியது திருவாரூரில் கட்டப்பட்டுள்ளது. தென்னகத்தின் இந்த தாஜ்மஹாலை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். அதுகுறித்து இதில் காணலாம்.
Tamilnadu Taj Mahal: திருவாரூர் அருகே அம்மையப்பன் கிராமத்தில் ஷேக்தாவுது -ஜெய்லானிபிவி என்ற தம்பதிக்கு அமுர்தீன் (49) என்ற மகன் உள்ளார். அமுர்தீன் சென்னையில் தொழிலதிபராக உள்ளார். நான்கு மகள்கள் இவர்கள் அனைவருக்கும் திருமணம் நடைபெற்று சென்னையில் வசித்து வருகின்றனர். ஷேக்தாவுது பல ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எய்திய நிலையில், ஜெய்லானிபீவி அம்மையார் கடந்த 2020ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
கருணாநிதி போன்று...
அப்போது அமுர்தீன் தனது தாயார் ஜெய்லானி பீவி அம்மையாருக்கு அம்மையப்பன் கிராமத்தில் ஜிம்மா அமைக்க வேண்டும் என விரும்பி உள்ளார். அப்போது தனது கிராமத்தின் அருகே உள்ள காட்டூர் கிராமத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, தனது தாயார் அஞ்சுகம் அம்மையாருக்கு நினைவிடம் அமைத்து மரியாதை செலுத்தி வருவது போன்று தானும் தனது தாயாரின் மீது கொண்ட பாசத்தால் அவருக்கு நினைவிடத்தை செய்ய தீர்மானித்துள்ளார்.
ஜூன் 2இல் திறப்பு
மேலும், காதல் மனைவிக்காக ஆக்ராவில் தாஜ்மஹால் கட்டியது போன்று தனது தாயாரின் மீது பாசத்தால் ஆக்ராவில் உள்ள முகலாய கட்டட வடிவமைப்பில் அதே போல் ராஜஸ்தானில் இருந்து வெள்ளை பளிங்கு கற்களை கொண்டு முழுவதுமாக கட்டமைப்பது என முடிவெடுத்துள்ளார். அதன் அடிப்படையில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் 8 ஆயிரம் சதுர அடி அகலத்திலும், 46 அடி உயரத்திலும் அந்த மினாரை அமைத்துள்ளார்.
இந்த தென்னகத்தின் தாஜ்மஹால் கடந்த ஜூன் 2ஆம் தேதி எளிமையான முறையில் திறக்கப்பட்டது. இதில் தனது தாயாரின் ஜிம்மா மசூதியும் அதன் ஒருபுறம் பிரமாண்டமான பள்ளிவாசல் கட்டடமும், மறுபுறம் மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் மதர்ஷா கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆர்வம்
மேலும், டெல்லிக்கு சென்று உலக அதிசயங்கள் ஒன்றான தாஜ்மஹாலை பார்க்க அனைவராலும் முடியாத நிலையில் தென் தமிழகத்தில் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட முதல் தாஜ்மஹால் இதுவாகும். இங்கு அனைத்து சமுதாய மக்களும் சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் பார்த்து செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அருகே உள்ள கிராம மக்கள் இந்த தாஜ்மஹாலை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். தனது தாய் மீதான அன்பால் தாஜ்மஹால் கட்டிய மகனை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ