தனது தாயுடன் தவறான உறவு வைத்திருந்தவரை, அப்பெண்ணின் மகன் ஓட, ஓட விரட்டி கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் சிவகங்கையில் அரங்கேறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவகங்கை நேரு பஜார் வீதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், வெளிநோயாளிகள் பிரிவில், தற்காலிக மருந்தாளுநராக பணியாற்றி வந்தார். திருமணமாகி, மனைவி பிரிந்து சென்றதால், தனியே வசித்து வரும் இவர் ஒக்கூரைச் சேர்ந்த சாந்தி என்பவருடன் தவறான உறவு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.


இதையறிந்த, சாந்தியின் மகன் அருண்குமார் இருவரையும் கண்டித்து வந்துள்ளார். ஆனால், இருவரும் அதனை பொருட்படுத்தாததால் அருண்குமார், தனது தாயாரை வீட்டிலேயே, அடித்து உதைத்து, கட்டிப்போட்டதாக கூறப்படுகிறது.


இதை அறியாது, பலமுறை போன் செய்தும் அந்த பெண் எடுக்காததால் அவருக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார் தமிழ்ச்செல்வன். ஏற்கனவே, தவறான உறவு வைத்திருந்ததால், தனது தாயாரை கட்டிப்போட்டு வைத்திருந்த அருண்குமார், தமிழ்ச்செல்வன் அனுப்பிய மெசேஜ்-ஐ கண்டு மேலும் ஆத்திரமடைந்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து, அதே கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய அருண்குமார், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று தமிழ்ச்செல்வனை எச்சரித்திருக்கிறார்.


அதுசமயம், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிபோக, தாம் மறைத்துவைத்திருந்த கத்தியை அருண்குமார் எடுத்து தமிழ்செல்வனை ஓட, ஓட விரட்டி, 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தி கொன்றுள்ளார்.


அங்கிருந்தவர்கள் சம்பவத்தை கண்டு அருண்குமார் மடக்கிப் பிடித்து, அறையில் அடைத்து வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.