அதிமுகவை விரைவில் ஒன்றுபட்ட பார்க்கலாம் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுயது:-


''திமுகவைச் சேர்ந்த 250 பேர் என் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம்.


நீர் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்றுள்ளார்.


உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இரட்டை இலை சின்னத்தை மீட்கும் வகையில் அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால், எங்கள் நிபந்தனைகள் நிறைவேற்றப்படாத வரைக்கும் அதிமுகவின் பிரிந்த அணிகள் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்று அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் நிர்வாகிகள் கூறிவருகின்றனர்.


இந்நிலையில் விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம் என்று முதல்வர் பழனிசாமி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.