விரைவில் அனைத்து ஸ்லீப்பர் செல்களும் வெளியே வருவார்கள். - டிடிவி!
சசிகலாவின் ஆலோசனை படி செயல்படுவேன், விரைவில் அவரை சந்தித்து வாழ்த்து பெறுவேன்.`
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது!
கடந்த டிச., 21 ஆம் நாள் நடைப்பெற்ற இந்த இடைத்தேர்தலில் 1,76,885 வாக்குகள் பதிவாகின. இன்று (டிச., 24) காலை 8.00 மணியளவில் இந்த வாக்குகளின் எண்ணிக்கை துவங்கியது. ஆரம்பம் முதலே சுயேட்சை வேட்பாளர் தினகரன் முன்னிலை வகித்து வந்தார். இறுதியாக 40707 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் அமோக வெற்றிப்பெற்றார்.
தேர்தல் முடிவில் பிரதான கட்சிகளான திமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தங்கள் டெப்பாசிட்டை இழந்ததாக தெரிவிக்கப்பட்டது!
வெற்றியின் பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரிடம் தினகரன் பெற்றுக்கொள்ள வாக்கும் எண்ணும் மையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தெரிவித்ததாவது...
"இந்த வெற்றி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா-வின் உண்மை தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி. எனது வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி.
இரட்டை இலை, எம்ஜிஆர், ஜெயலலிதா-விடம் இருந்தால் மட்டுமே வெற்றி சின்னம்.
ஆர்.கே.நகர் ஜெயலலிதா-வின் தொகுதி, அவரின் உன்மை தொண்டனுக்கு மட்டுமே அங்கே வாய்ப்பு கிடைக்கும் தற்போது எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பிற்கான காலம் வெகுதூரம் இல்லை, அப்போது அனைத்து ஸ்லீப்பர் செல்களும் வெளியே வருவார்கள்.
சசிகலாவின் ஆலோசனை படி செயல்படுவேன், விரைவில் அவரை சந்தித்து வாழ்த்து பெறுவேன்."
என தெரிவித்துள்ளார்!