சென்னை மெட்ரோ ரயிலுக்கு மக்கள் ஆதரவு கிடைத்து வரும் நிலையில் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று இயக்குனர் நரசிம்ம பிரசாத் கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் முதல் முதலாக கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதி கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.   இதன்பின்னர் சின்னமலை-விமானநிலையம், ஆலந்தூர்-பரங்கிமலை, திருமங்கலம்-நேரு பூங்கா இடையே படிப்படியாக மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கியது. 


தற்போது இந்த மாதம் 25-ம் தேதி நேரு பூங்கா-சென்டிரல், சின்னமலை-தேனாம்பேட்டை ஏ.ஜி.- டி.எம்.எஸ். இடையே போக்குவரத்து தொடங்கியது.  


மெட்ரோ ரயில் போக்குவரத்தை அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் கடந்த 25 முதல் 27 வரை பொதுமக்களுக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.  இதில் மொத்தம் 6 லட்சத்து 11 ஆயிரம் பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். 


இந்நிலையில் இலவச சேவை மூலம் மக்கள் மெட்ரோ ரயிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆகவே மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க உரிய அதிகாரம் கொண்ட அமைப்புடன் ஆலோசிக்கப்படும். என இயக்குனர் நரசிம்ம பிரசாத் கூறியுள்ளார்.