கட்சிக்கு எதிராக செயல்பட்ட கராத்தே தியாகராஜனை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தது காங்கிரஸ்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் கராத்தே தியாகராஜனை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. 



இது குறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்; தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் கராத்தே தியாகராஜன். கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் இடைநீக்கம் செய்ய AICC  ஒப்புதல் அளித்துள்ளது. தெற்கு சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர், அடிக்கடி கட்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒழுக்கத்தை மீறியதன் அடிப்படையில் அவர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கட்சிக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.