கோடை காலத்தில், மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, தென்தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் (Meteorological Department) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கேரளா மற்றும் அதனை ஒட்டி அமைந்துள்ள தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும்  தென் தமிழக மாவட்டங்களான,  திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில், இடி மின்னலுடன் கூடிய இலேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.


ஆனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில், வெப்பநிலை அதிகரிக்கூடும் என கூறப்படுகிறது. பிற மாவட்டங்களில், அதிபட்ச வெப்பநிலை பதிவாகக் கூடும் என வானிலை ஆய்வறிக்கை கூறுகிறது. 


சென்னையில் (Chennai) அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிக பட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ALSO READ | புதுச்சேரியில் கொரோனா மருந்து தட்டுபாடு ஏதும் இல்லை: டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன்


சென்னை,  செங்கல்பட்டு,  திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளகுறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்து இரு நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்வும் வானிலை அறிக்கை கூறுகிறது.


ஆனால், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என கூறப்படுகிறது.


ALSO READ | அரசுக்கும் காவல்துறைக்கும் மிக்க நன்றி: நடிகர் விவேக் குடும்பத்தினர்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR