Congress Jayakumar Death Latest Updates: கடந்த மே 2ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வீடு திரும்பாததை அடுத்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். தொடர்ந்து, மே 4ஆம் தேதி அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் மரணம் குறித்து விசாரிக்க நெல்லை காவல்துறை கண்காணிப்பாளர் தனிப்படைகளை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தபடி அரசியல், அவரது நண்பர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


தென் மண்டல ஐஜி கண்ணன் விளக்கம்


இந்நிலையில் இந்த மரணம் குறித்து திருநெல்வேலியில் தென் மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி கண்ணன்," காணாமல் போனதாக பதியப்பட்ட புகார் அதன் பின்பாக சந்தேகத்திக்கிடமான மரணம் என மாற்றப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ஜெயக்குமார் மரணத்தில் நீடிக்கும் மர்மம்...!


காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரண வாக்குமூலம் என எழுதியிருந்த அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த அனைவரிடமும் விசாரணையை நடத்தி முடித்து இருக்கிறோம். அது மட்டுமல்லாது அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டு இருக்கிறோம். தற்போது வரை சந்தேகித்துக்கிடமான மரணம் என்றே வழக்குப்பதிவு செய்து இருக்கிறோம். முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பு தான் முழுமையான தகவல் வெளியாகும். அவரது வாயில் பாத்திரம் தேய்க்கும் ஸ்கிரபர் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவரது கால் பகுதியில் கடப்பா கல் வைத்தும் கட்டப்பட்டுள்ளது. 


பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை...


அவரது எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல அவர் எழுதியதாக குறிப்பிடும் கடிதம் குறித்தான உண்மையும் அறிய கையெழுத்து நிபுணர்களின் ஆய்விற்கும் உட்படுத்தப்பட்டிருக்கிறது. 
இந்த மரணத்தை பொருத்தவரை 10 டிஎஸ்பிகள் தலைமையிலான பத்து தனி படைகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள், சைபர் கிரைம் பிரிவு போலீசார் இந்த விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 


விசாரணை முழுவதுமே அறிவியல் பூர்வமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேகரிக்கப்பட்ட தடயங்கள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. அனுப்பப்பட்ட மாதிரிகளின் அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை இறுதி அறிக்கை வரும் பட்சத்தில் முழுமையான தகவல் தெரிய வர வாய்ப்பு இருக்கிறது. 


கொலையா தற்கொலையா...


ஜெயக்குமார் குறிப்பிட்டிருந்த 32 பேரிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தேவைப்பட்டால் தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு விடமும் விசாரணை நடத்தப்படும்" என்றார். மேலும், ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கும் ஜெயகுமாரின் மரணத்திற்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,"ராமஜெயம் வழக்கில் அது கொலைதான் என ஆரம்பத்திலேயே சொல்லும் அளவிற்கு ஆதாரங்கள் இருந்தது. ஆனால் இந்த வழக்கில் இது கொலையா தற்கொலையா என்பதை உறுதிசெய்ய இயலவில்லை" என்றார். 


மேலும் படிக்க | ராமஜெயம் கொலையாளிகளுக்கு ஜெயக்குமார் கொலையில் தொடர்பு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ