Railway Passengers | தமிழகத்தில் ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரங்களை வெளியிட்ட தெற்கு ரயில்வே
Indian Railways Latest News In Tamil: நவம்பர் மாதத்தில் தாமதமாக புறப்படும் ரயில்களும், ரத்து செய்யப்படும் ரயில்கள், மாற்று வழியாக செல்லும் ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே தகவல் அளித்துள்ளது.
Southern Railway Latest Updates: தமிழகம் வழியாக இயக்கப்படும் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் முழுமையாகவும், பகுதியளவிலும் ரத்து செய்யப்படுவதாகவும், அவை தொடங்கும் இடத்தில் மாற்றம் செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதுக்குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
மயிலாடுதுறை-திருச்சிராப்பள்ளி விரைவு ரயில்
நவம்பர் 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் காலை 8.05 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் ரயில் 16833 மயிலாடுதுறை - திருச்சிராப்பள்ளி விரைவு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி-காரைக்கால் ரயில்
ரயில் எண் 06880, திருச்சிராப்பள்ளி - காரைக்கால் காலை 6:50 மற்றும் 8:35 மணிக்கு புறப்படும் மற்றும் நவம்பர் 1-30 (திங்கள் தவிர) திருவாரூரில் குறுகிய நேரம் நிறுத்தப்படும். இந்த ரயில் திருவாரூர் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி-விழுப்புரம் ரயில்
ரயில் எண் 0689, திருச்சிராப்பள்ளி - விழுப்புரம் ரயில், திருச்சிராப்பள்ளியில் இருந்து நவம்பர் 5 ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு புறப்படும் ரயில் விருத்தாசலத்தில் குறுகிய நேரம் நிறுத்தப்படும். விருத்தாசலம் - விழுப்புரம் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.
காரைக்கால்-திருச்சிராப்பள்ளி விரைவு ரயில்
ரயில் எண் 06739 காரைக்கால் - திருச்சிராப்பள்ளி விரைவு ரயில் காரைக்காலில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு நவம்பர் 1-30 (திங்கள் தவிர) திருவாரூரில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும்.
காரைக்கால்-தஞ்சாவூர் சிறப்பு ரயில்
ரயில் எண் 06457 காரைக்கால் - தஞ்சாவூர் சிறப்பு ரயில் காரைக்காலில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, நவம்பர் 1-30 வரை (திங்கள் தவிர) திருவாரூரில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும். காரைக்கால் - திருவாரூர் இடையே ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்படும்.
விழுப்புரம்-திருச்சிராப்பள்ளி விரைவு ரயில்
ரயில் எண் 06891 விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி விரைவு ரயில் நவம்பர் 6 ஆம் தேதி காலை 5.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும். விருத்தாசலத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும். விழுப்புரம் - விருத்தாசலம் இடையே ரயில்கள் ரத்து செய்யப்படும்.
விழுப்புரம்-மயிலாடுதுறை விரைவு ரயில்
ரயில் எண் 06689 விழுப்புரம் - மயிலாடுதுறை விரைவு ரயில் நவம்பர் 6 ஆம் தேதி காலை 6 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து காலை 6.19 மணிக்கு திருத்துறையூரில் இருந்து புறப்படும். இந்த ரயில் விழுப்புரம் - திருத்துறையூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
திருச்செந்தூர்-எழும்பூர் விரைவு ரயில்
ரயில் எண் 20606 திருச்செந்தூர் - எழும்பூர் விரைவு ரயில் நவம்பர் 5-ஆம் தேதி இரவு 8.25 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டு இரவு 10.35 மணிக்கு (இரண்டு மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக) திருச்செந்தூரில் இருந்து புறப்படும். நவம்பர் 6-ம் தேதி காலை 6 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும்.
மதுரை-எழும்பூர் தேஜாஸ் எக்ஸ்பிரஸ்
நவம்பர் 6 ஆம் தேதி மாலை 3 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் ரயில் எண் 22672 மதுரை - எழும்பூர் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து மாலை 4 மணிக்கு (ஒரு மணி நேரம் தாமதமாக) புறப்படும்.
மேலும் படிக்க - ரயில் டிக்கெட் IRCTC ஆப் மூலம் புக் செய்கிறீர்களா? இதை தெரிஞ்சுக்கோங்க
மேலும் படிக்க - ரயிலில் கொடுக்கப்படும் போர்வைகள் எத்தனை நாளுக்கு ஒரு முறை துவக்கப்படும் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ