கோவை ரயில் நிலையம் புதிய கட்டுமான பணிகளை மேற்கொள்ள இந்திய ரயில்வே பக்கா பிளானை போட்டுள்ளது.
Southern Railway Announcement: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக 5 முக்கிய ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த 15 நாட்களில் சென்னை எழும்பூரில் உள்ள ரயில் நிலையத்துக்கு விரைவு ரயில்கள் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி இடையே திருக்குவளை வழியாக அமைக்கப்பட்டு வரும் 36 கிலோமீட்டர் நீள புதிய ரயில்பாதைத் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் சுதா எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர், திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புப் பணிகள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்தார். இந்தத் திட்டத்திற்குத் தேவையான 120 ஹெக்டேர் நிலத்தில், இதுவரை 108 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திட்டமிடப்பட்ட 23 பெரிய பாலங்களில் 11, 330 சிறிய பாலங்களில் 288, 4 மேம்பாலங்களில் ஒன்று மற்றும் 34 சுரங்கப்பாதைகளில் 21 கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய ரயில்பாதையில் பாலக்குறிச்சி, செம்பியன்மகாதேவி, திருக்குவளை மற்றும் எட்டுக்குடி ஆகிய நான்கு இடங்களில் புதிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் திருக்குவளை மற்றும் பாலக்குறிச்சி பிளாக் நிலையங்களாகவும், செம்பியன்மகாதேவி மற்றும் எட்டுக்குடி நிறுத்தும் நிலையங்களாகவும் செயல்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டம் நிறைவடைந்தால், நாகப்பட்டினம் மற்றும் காவிரி டெல்டா மாவட்ட மக்களுக்கு போக்குவரத்து வசதி மேம்படுவதோடு, விவசாய மற்றும் மீன்வளப் பொருட்களின் போக்குவரத்துக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமேஸ்வரத்தில் லோகோ பைலட்களுக்கான புதிய ஓய்வறையைத் திறந்து வைத்துப் பேசிய தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், ராமேஸ்வரம் ரயில் நிலையப் புனரமைப்புப் பணிகள் 95 சதவீதத்திற்கும் மேல் முடிவடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். மீதமுள்ள 4 முதல் 5 சதவீதப் பணிகளும் முழுமைபெற்று, உலகத்தரம் வாய்ந்த வசதிகள், கூடுதல் பிட் லைன்கள் மற்றும் புதிய பிளாட்ஃபார்ம்களுடன் ராமேஸ்வரம் நிலையம் புதுப்பொலிவு பெறவுள்ளது. இந்த உலகத்தர ரயில் நிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளார். இத்துடன் மற்றொரு முக்கிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 1964 புயலில் அழிந்துபோன தனுஷ்கோடி ரயில் பாதையை மீண்டும் அமைப்பது தொடர்பாக, தமிழக அரசுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கத் தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், நூற்றாண்டு பழமையான பழைய பாம்பன் பாலம் பலவீனமடைந்துவிட்டதால் பாதுகாப்புக் கருதி அதை அப்படியே வைத்திருக்க முடியாது என்றும், அதற்குப் பதிலாக ராமநாதபுரம் அருகே அதன் மாதிரி வடிவம் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்குவதன் மூலம் தென் மாவட்டப் பயணிகளின் பயண நேரம் பெருமளவில் குறையும். சென்னைக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையேயான ரயில் போக்குவரத்தில் இது ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Tambaram - Tenkasi Special Express Train : தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேரத்தில் சிறப்பு சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் சேவைகள் எந்தெந்த தேதிகளில் இயக்கப்படுகின்றன?; எந்தெந்த ரயில் நிலையங்களில் நிற்கும்? உள்ளிட்ட தகவல்களை இங்கு காணலாம்.
Southern Railway Electric Train: சென்னையில் நாளை 8 மின்சார ரயில்கள் ரத்து என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது, பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Onam Festival Special Trains: ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் இருந்து கேரளா வழியாக மூன்று சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க உள்ளது. இந்த மூன்று சிறப்பு ரயில்களின் முழு விவரங்களையும் இங்கு காணலாம்.
Chennai Beach - Tambaram Train Cancellation : சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நாளையும் (ஜூலை 5), ஜூலை 12ஆம் தேதியும் 41 ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. இதன் விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.
Southern Railway : திருநெல்வேலி - சென்னை இடையே இரு வழித்தடங்களிலும் வாராந்திர ரயில் சேவை இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் எந்தெந்த தேதிகளில் இயக்கப்படும்?, எந்தெந்த ரயில் நிலையங்களில் நிற்கும்? என்பதை இங்கு காணலாம்.
Chennai Suburban Trains Schedule Change : சென்னையிலிருந்து தொடங்கப்படும் புறநகர் மின்சார ரயில்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
வந்தே பாரத் ரயில் கிளம்ப இன்னும் 15 நிமிடம்தான் இருக்கா? கவலையே வேண்டாம்... தற்போது அந்த குறைந்த நேரத்தில்கூட டிக்கெட் புக் செய்யலாம்! இந்த ஒரு மாற்றத்தால் பயணிகள் எண்ணிக்கையும், தெற்கு ரயில்வேயின் வருவாயும் அதிரடியாக உயர்ந்திருக்கிறது என்பதே வியப்பூட்டும் உண்மை..!
நெல்லை ரயில் நிலைய யார்டு பராமரிப்புப் பணி காரணமாக, ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில் கோவை - நாகர்கோவில் மற்றும் ஈரோடு - செங்கோட்டை வழித்தட ரயில்கள் முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Nellai Superfast Express : சென்னை - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் நெல்லை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் பெரிய மாற்றத்தை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் இந்த ரயிலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பயணிகள் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
Southern Railway : மதுரை மற்றும் உத்தர பிரதேசத்தின் கான்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் அட்டவணை, முன்பதிவு உள்ளிட்ட விவரங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
Chennai Egmore - Sengottai Special Train : பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், அதை கட்டுப்படுத்த வாரம் இரு முறை என சென்னை எழும்பூர் முதல் செங்கோட்டை வரை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட இருக்கிறது. இதன் விவரங்களை இங்கு காணலாம்.
Madurai - Sengottai Train Cancelled : குற்றால சீசன் தொடங்கியிருக்கும் நிலையில், மதுரை மக்கள் பலரும் குற்றாலம் செல்ல பேருந்து அல்லது தனிப்பட்ட வாகனங்களில் செல்வார்கள். சில மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் ரயில்களிலும் குற்றாலம் செல்வார்கள். அப்படியிருக்க, மதுரை - செங்கோட்டை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை பயணிகள் கவனிக்க வேண்டும்.
விருத்தாசலம் ரயில் நிலையத்தில் 500 மீட்டர் தொலைவிற்கு ரயில் நிற்பதால் ரயில் பயணிகள் ஓடிவந்து ஏறும் அவலம்.
Trichy railway news : தமிழ்நாட்டுக்கு தெற்கு ரயில்வே மிகப்பெரிய குட் நியூஸ் வெளியிட்டுள்ளது. திருச்சி, ராமேஸ்வரம், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட ஊர்களுக்கு புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
Chennai Tirupati Train: சென்னையில் இருந்து திருப்பதி செல்பவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்து திருப்பதி வரை இயக்கப்படும் மெமு ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் இருந்து திருச்சானூர் வரை தான் மெமு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Southern Railway Madurai Division : மதுரை கோட்டத்தில் செய்யப்பட்டு வரும் மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்பு காரணமாக மொத்தம் 5 ரயில்களின் சேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த 5 ரயில்களின் சேவையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Southern Railway Special Trains: கோடைக் கால சிறப்பு ரயில்களின் சேவையை தெற்கு ரயில்வே ஜூன் 15ஆம் தேதி வரை நீடித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காகி ஆகிய ரயில்களின் சேவைகள் நீடிக்கப்பட்டுள்ளது.
Southern Railway Latest Announcement: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜூன் 5) முதல் சென்னையில் இருந்து புறப்படும் விரைவு ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 7 விரைவு ரயில்கள் தாமதமாக செல்லக் கூடும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.