வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், அவர் யூட்யூப் சேனல ஒன்றில் சந்திப்பு ஒன்றை நடத்தினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது தந்தைக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவர்களை அவர் அறிமுகப்படுத்தி பேசினார். அவர்களுக்கு தனது நன்றிகளையும் தெரிவித்து கொண்டார். 


எஸ்பிபி (SPB) அவர்கள் சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது என்றும், அதை கொடுக்க முடியாமல், அரசிடம் உதவி கோரியதாகவும், துணை முதல்வர் வரை விஷயம் சென்று, அவர் களத்தில் இறங்கி உதவிய பின் உடல் அவரது குடும்பத்தாரிடம் கொடுக்கப்பட்டது எனவும் வதந்திகள் பரவின. 


தனது அப்பா எஸ்பி பாலசுப்ரமணியத்தை ( SP Balasubramaniam) இழந்த துக்கத்தில் இருக்கும் போது, தேவையில்லாத வதந்திகளால், மனம் புண்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.


பில்லிங் தொடர்பாக எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்றும், மருத்துவமனைக்கும் தங்கள் குடும்பத்திற்கு இடையில் நல்ல உறவு இருக்கிறது எனவும்  கூறினார். 


பில்லிங் தொடர்பாக குறிப்பிடுகையில், அவ்வப்போது தாங்கள் பணம் செலுத்தி வந்ததாகவும், ஒரு குறிப்பிட்ட அளவு இன்ஸ்யூரன்சில் கிடைத்ததாகவும், எஸ்பிபி இறந்த பிறகு, பில்லிங் தொடர்பாக இன்னும் எவ்வளவு கொடுக்க வேண்டும் என கேட்டதற்கு, அது பற்றி எதுவும் பேச வேண்டாம் என மருத்துவ மனை கூறியது என்றும் தேவையில்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டும்.பில்லிங் தொடர்பான தகவல்களை கொடுக்குமாறு கேட்டத்தற்கு, நிதி தொடர்பான விஷயங்களை மற்றவர்களை பகிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன கேட்டார். 


அஜித் வராததை எல்லம் பிரச்சனையாக பேச வேண்டிய அவசியம் என்ன என அவர் காட்டமாக கேட்டார். அவர் தனது வீட்டில் இருந்தே எனது அப்பாவிற்கு மரியாதை செலுத்துவதில் யாருக்கு என்ன பிரச்சனை என கேட்டார். அஜித் எனது நண்பர், அவர் என்னுடன் பேசினாரா, பேசவில்லையா என்பதை,  பற்றி மற்றவர்கள் கவலைப்பட வேண்டிய, கருத்து கூற வேண்டிய அவசியம் என்ன என கேட்டார். 


எஸ்பிபி மறைவுக்கு பிறகு நடிகர் விஜய் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார் என்றும் ஆனால், அவர்  பாடல்களின் மூலம் விஜயை விட அதிகம் பயன் அடைந்த சிலர் ஒதுங்கி இருக்கும்போது விஜயின் இந்த செயல் மதிக்கத் தக்கது என்றுஅஜித்தை தாக்கி மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். 


 


தனது தந்தை கோவிட் -19 காரணமாக இறக்கவில்லை என்றும் கோவிட் 19 குணமாகி விட்டது. ஆனால், அதனால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பு சரியாகவில்லை என்றும் அதனால் தான் அவர் இறந்தார் என அவர் குறிப்பிட்டார்.


நான் எனது அம்மாவை கவனிப்பேனா அல்லது வதந்திகளுக்கு பதில் சொல்வேனா என காட்டாமாக கேட்டார். 


மேலும் படிக்க | மேலும் படிக்க | SPB இன் சிகிச்சை விவரங்கள் குறித்து விரைவில் தெளிவுபடுத்தப்படும்: SP Charan


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR