SP Velumani: முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது வழக்கு பதிவு
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட அவரது பங்குதாரர்கள் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 52க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணி (SP Velumani) வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நபர் ஒருவர் வீட்டிலும் சோதனை (IT Raid) நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ALSO READ | முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
கோவையில் பல்வேறு திட்டங்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணி கோடிக்கணக்கில் மோசடி செய்து ஊழல் செய்து இருப்பதாக கடந்த மாதம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாத் என்பவர் கோவை லஞ்ச ஒழிப்பு காவல் துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில், தமிழகத்தில் எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமான சிலரது வீடு உட்பட 15 இடங்களில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்று தருவதாக ரூ.1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள் சென்னை மாநாகராட்சி ஒப்பந்தத்தில் 464 கோடி ரூபாயும் கோவை மாநகராட்சி ஒப்பந்தத்தில் 346 கோடி ஊழல் செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது இதனடிப்படையில் அரசு ஒப்பந்தங்களை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு என 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னதாக ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது குறிப்பிடதக்கது.
ALSO READ | Tamil Nadu: பாஜக-வில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR