எஸ்பி வேலுமணி பேச்சு


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் லோகேஷ் தமிழ்செல்வனை அறிமுகப்படுத்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் அதிமுக, திமுகவுக்கு தான் நேரடி போட்டி, பாஜக சீன்லயே இல்லை என தெரிவித்தார். 


மேலும் படிக்க | 'ஊழல் பற்றி அவர்கள் பேசவே கூடாது...' பொள்ளாச்சியில் பாஜகவை பொளந்தெடுத்த கனிமொழி


அதிமுக தயவில் எம்எல்ஏக்கள்


தொடர்ந்து பேசிய எஸ்பி வேலுமணி, "அதிமுகவை பொருத்தவரை வரும் தேர்தல் மிக முக்கியமானது. தொண்டர்களை நம்பி களம் இறங்கியுள்ளோம். தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்கள் எதையுமே செய்யாத ஆட்சி திமுக ஆட்சி. மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு என மக்கள் திமுக ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மக்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்கள் கூட அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராகி விட்டனர். இந்திய அளவில் வேண்டுமானால் பாஜக பெரிய கட்சியாக இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் சிறிய கட்சி தான். மூன்று அல்லது நான்கு சதவிகித வாக்குகள் மட்டுமே அக்கட்சிக்கு உள்ளது. அதிமுக தயவில் தான் அவர்களுக்கு தமிழகத்தில் சில எம்.எல்.ஏ க்கள் உள்ளனர். எனவே அதிமுக திமுக இடையே தான் இத்தேர்தலில் போட்டி. பாஜக கணக்கிலேயே இல்லை" என பேசினார்.


அதிமுக vs திமுக vs பாஜக 


வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக தனித்தனி கூட்டணியாக களம் காண இருக்கின்றனர். எஸ்பி வேலுமணிக்கு செல்வாக்கு இருக்கும் கோவை மற்றும் நீலகிரி  நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக நேரடியாக களம் கண்டிருக்கிறது. கோவையில் பாஜக தமிழ்நாடு மாநில தலைவரான அண்ணாமலை வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளதால் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. அதிமுகவில் சிங்கை ராமச்சந்திரன், திமுகவில் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டிருக்கின்றனர். பரபரப்பான தொகுதியாக கோவை இருப்பதால் மூன்று கட்சிகளுமே தீவிர வாக்குசேகரிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதேபோல் நீலகிரி தொகுதியில் மத்திய இணையமைச்சரான எல் முருகன் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக திமுகவில் ஆ ராசா போட்டியிடுகிறார்.


மேலும் படிக்க | சசிகலா EPS-ஐ விட இளையவர்... குண்டை தூக்கிப்போட்ட கே.சி. பழனிச்சாமி - என்ன மேட்டர்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ