உண்மைக்குப் புறம்பாகப் பேசுவது பிரதமர் மோடிக்கு கை தேர்ந்த கலை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2009-ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அவர்கள் மறு வாக்கு எண்ணிக்கை முறையில் தான் வெற்றிப் பெற்றார் என திருப்பூர் கூட்டத்தில் பிரதமர்மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியில் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.சிதம்பரம் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...


"2009 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கைத் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கையில் (ரீகவுன்ட்) நான் வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி ஒரு பொய்யை மீண்டும் திருப்பூர் கூட்டத்தில் சொல்லியிருக்கிறார்



சிவகங்கை தொகுதியில் ஒரு முறை தான் வாக்கு எண்ணப்பட்டது. மறு எண்ணிக்கை நடைபெறவில்லை.


உண்மைக்குப் புறம்பாகப் பேசுவது பிரதமர் மோடிக்கு கை தேர்ந்த கலை" என குறிப்பிட்டுள்ளார்.


கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜகண்ணப்பன், சிதம்பரம் வெற்றிக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கிடையில் தற்போது பிரதமர் மோடி அவர்கள் மீண்டும் ப.சிதம்பரம் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.