தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் 2022ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்து துரையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும்  சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து கடந்த 20/12/2021 அன்று போக்குவரத்து துறை அமைச்சர் ஆர் .எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  மேற்படி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தற்போது அரசு அறிவுறுத்தியுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11/01/2022 முதல் 13/01/2022 வரையில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேரூந்துகளுடன் 4,000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 10,300 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகள் இயக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ஜல்லிக்கட்டு போட்டி - புதிய விதிமுறைகளுடன் அரசாணை வெளியீடு!


2022 பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து பிற இடங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளின் விவரங்கள்:


1) மாதவரம் புதிய பேருந்து நிலையம் - செங்குன்றம் வழியாக பொன்னேரி கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள்.


2) கே.கே.நகர் மா.போ.க பேருந்து நிலையம் - ECR வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.


3) தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்(MEPZ) - திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ரூட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.


4) தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் - திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் , மற்றும் திண்டிவனம் வழியாக பண்ரூட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர் செல்லும் பேருந்துகள்.


5) பூந்தமல்லி பேருந்து நிலையம் - வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தருமபுரி , கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள்.


6) புரட்சி தலைவர் டாக்டர் MGR பேருந்து நிலையம், கோயம்பேடு - மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமாரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை , திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரு.



மேலும் முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் புரட்சி தலைவர் டாக்டர் MGR பேருந்து நிலையம் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நசரத்பேட்டை வெளி சுற்றுச்சாலை (outer ring road) வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலிருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.


கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் , பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு அல்லது ஸ்ரீ பெரும்புதூர், செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் கோயம்பேடு புரட்சி தலைவர் MGR பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், MEPZ (தாம்பரம் சானிடோரியம்)ல் 1 முன்பதிவு மையமும் மொத்தமாக 11 முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன.


முன்பதிவு செய்துகொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான www.tnstc.in tnstc official app, www.redbus.in , www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.


ALSO READ | Pongal 2022: முகூர்த்த காலுடன் தொடங்கியதா அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR