8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் மாநில பாடதிட்டத்தின் கீழ் செயல்படும் அரசு (govt) மற்றும் அரசு உதவி (govt aided) பெறும் பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்தது.


இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் தெரிவித்து வந்த நிலையில் நேற்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்த ஆண்டு நிச்சயமாக 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் எனவும் அடுத்த ஆண்டு தேர்வை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


இந்நிலையில் இன்று பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாதிரி வினாத்தாள் தயாரித்து தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.


 


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.