பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலாவுக்கு சிறப்பு சலுகைள் அளிக்க 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற சிறைத்துறை அதிகாரி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட  சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கர்நாடக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


கடந்த 23-ம் தேதி சிறைத்துறை டிஐஜியாக ரூபா பதவி ஏற்றார். இதையடுத்து அவர் மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளுக்கு விசிட் அடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தினார்.


அப்போது சசிகலாவுக்கு ஜெயிலில் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்திருப்பதும், அதற்காக கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயணாவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக சோதனையின் போது ரூபாவிடம் அதிகாரிகள் கூறினார்கள்.


இதையடுத்து ரூபா கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயணாவுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதி செய்து கொடுத்து இருப்பது சிறை விதிமுறைப்படி தவறு. மேலும் தாங்கள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தி பாரபட்சமின்றி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து முறைப்படி பதில் அளிக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.