சென்னை மெட்ரோவில் சிறப்பு கட்டணச் சலுகை!!
சென்னை மெட்ரோ நிர்வாகம் பண்டிகை காலத்திற்க்கான சிறப்பு கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது.
இன்று விநாயகர் சதுர்த்தி தொடக்கி அடுத்த மாதம் தீபாவளி வரை தொடர்ந்து பண்டிகை வருவதால், சென்னை மெட்ரோ ரயிலில் சிறப்பு கட்டணச் சலுகை அறிவித்துள்ளது.
அதாவது, இன்று முதல் அடுத்த மாதம் அக்டோபர் 31-ம் தேதி வரை மெட்ரோவில் பயணிக்கும் பயணிகள் 20% தள்ளுபடி வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பண்டிகை காலத்தில் கூட்டம் நெரிசல் அதிகம் இருப்பதால், பயணிகள் மெட்ரோ வழித்தடத்தை பயன்படுத்தும் விதமாக, மெட்ரோ நிர்வாகம் சிறப்பு சலுகை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.