குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவும், இடைநிற்றலை தடுக்கவும், ஏழை மாணவர்களும் பட்டப்படிப்பை முடிக்கவும் தமிழக அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. ஆதி திராவிட, பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதி திராவிடக் மாணவர்களுக்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்கள் பெற்றோர்களை சிரமப்படுத்தாமல் உயர்கல்வியை தொடர அரசு இந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2024-2025ம் ஆண்டுக்கான கல்லூரி உதவித்தொகைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | டிசம்பர் மாத சம்பளம்.. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு GOOD NEWS


நீங்கள் ஏற்கனவே கல்லூரியில் படிக்கும் மாணவராக இருந்து உதவித்தொகை பெற்றிருந்தால், மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. மாணவர்கள் கல்லூரிகளில் படிப்பதை சம்மந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்படும். பின்னர் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். 2024-2025 ஆம் கல்வியாண்டில் சேர்ந்த புதிய மாணவர்கள் மற்றும் கடந்த ஆண்டு உதவி தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் தங்கள் கல்லூரியின் மூலம் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். UMIS இணையதளத்தை (https://umis.tn.gov.in/) பயன்படுத்தி மாணவர்கள் தங்களுக்கான உதவி தொகையை கோரலாம்.


கல்லூரி முதல்வர்கள் இதுபற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்து ஆதிதிராவிடர், கிறிஸ்தவ ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க உதவ வேண்டும் என்று அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கல்வி உதவித் தொகை பெறுவது குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால், 1800-599-7638 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு அழைக்கலாம். ஜனவரி 31, 2025க்குள் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.


உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க என்ன ஆவணங்கள் தேவை?


கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கீழ் வரும் இந்த ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.


  • வருமானச் சான்றிதழ்: உங்கள் பெற்றோர் ஒரு வருடத்தில் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதைக் காட்டும் வருமானச் சான்றிதழ் தேவை. அது 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்.

  • சாதிச் சான்றிதழ்: உங்கள் வருமானம் மற்றும் சாதியை குறிப்பிடும் இணைய சான்று வைத்திருக்க வேண்டும். இந்த ஆவணங்களை ஆன்லைனில் பெறுவதற்கு அருகிலுள்ள இ-சேவை மையத்திற்குச் செல்லலாம்.

  • மாணவர்கள் தங்களது வங்கிக் கணக்கு எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். வங்கிக் கணக்கு பயன்பாட்டில் உள்ளதாக இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | Pongal Parisu | பொங்கல் சிறப்பு தொகுப்பு - ரேசன் கடைகளில் எப்போது வரை கிடைக்கும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ