தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. இதனையடுத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு இன்று இலவச பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி விருகம்பாக்கத்தில் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அவர் மாணவ - மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினார்.


விழா நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 


* தமிழக கல்வித்துறையில் பல புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும்.


* தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வை கொண்டு வரக்கூடாது என்பதை தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.


* மத்திய அரசு நடத்தும் எந்த தேர்வையும் சமாளிக்கும் வகையில் தமிழக மாணவ - மாணவிகளுக்கு சிறந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சியும் கொடுக்கப்படும்.


* தமிழகத்தில் ஆசிரியர் நியமனம் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்றது.


*மாணவ - மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படக் கூடாது என இப்போதே 10, 11, 12-ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டப் பட்டது. 


* தனியாருக்கு இணையாக தமிழக பள்ளிக்கல்வித் துறை திகழ்ந்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
  இவ்வாறு அவர் கூறினார்.