இலங்கையில் நடைபெற்ற சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு சார்பாக சென்னையை சேர்ந்த  டிபென்டெர் கரத்தே அகாடமிஅணி இந்தியாவை, முன்னிறுத்தி ஜூனியர் ,சீனியர், சூப்பர் சீனியர், போன்ற பிரிவுகளில் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளனர் .


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கராத்தே சாம்பின்ஷிப் போட்டி:


இலங்கையில் சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைப்பெற்றத. இதில், தமிழ்நாடு சார்பாக சென்னையை சேர்ந்த ‘டிபென்டெர் கராத்தே அகாடமியை சேர்ந்த வீரர்கள் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டனர். ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் ஆகிய மூன்று பிரிவுகளில் இந்த அகாடமியின் அணியை சேர்ந்த வீரர்கள் தங்கப்பதக்கங்களை தட்டு சென்றுள்ளனர். 


இதையடுத்து, இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கராத்தே அணியின் பயிற்சியாளர் ஹரிஹரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக வீரர்கள் முதல் மூன்று இடங்களை பிடித்தது மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த சேம்பியன் கோப்பையும் கைப்பற்றி சாதித்துதுள்ளதாகவும் கூறினார். 


கொரோனா பரவலுக்கு பிறகு அதிகளவு வீரர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சென்று விளையாடிய முதல் போட்டி இது தான் என்றும் அவர் கூறினார். 


மேலும் படிக்க | தமிழகம் முழுவதும் கோவில்களில் வடக்கு வாசல் மூடப்பட்டிருப்பது ஏன்?


நேபாளம்,பூட்டான், வங்காளதேசம், இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொண்டதாகவும், ஒரு போட்டியில் 45 நபர்கள் வரை கலந்து கொண்டார்கள் என்றும் அவர் கூறினார். அனைத்து நிலை போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் வெற்றி பெற்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 


வருகின்ற டிசம்பர் மாதம் ஜப்பானில் நடைபெற உள்ள வேர்ல்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தமிழ்நாட்டு மாணவர்கள் இந்தியாவிற்காக விளையாட உள்ளதாகவும்,  ஐந்து பேருக்கு இந்த போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். 


தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அவர்களுக்கான போதிய நிதி ஒழிப்பு உதவி இல்லாத சிக்கி தவித்து வருவதாகவும் அதற்கு அரசு சார்பில் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், பெண்களுக்கும் இந்த போட்டியில் பங்கு பெறுகிறார்கள் என்றும் ஆனால் அவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் இருப்பதாகவும் இதனால் அரசு அவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.


மேலும் படிக்க | மீனாட்சி மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 150 எம்பிபிஎஸ் இடங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ