இலங்கையில் நீடிக்கும் நெருக்கடி; தமிழகத்திற்கு அகதிகளாக வரும் ஈழத் தமிழர்கள்!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு நாளுக்கு நாள் இடம்பெயர்ந்து வருவது அதிகரித்து வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 27, 2022, 11:38 AM IST
  • இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி.
  • இலங்கையில் இருந்து 150 நபர்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
  • பொருளாதார நெருக்கடி மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கியுள்ளன.
இலங்கையில் நீடிக்கும் நெருக்கடி; தமிழகத்திற்கு அகதிகளாக வரும் ஈழத் தமிழர்கள்! title=

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு நாளுக்கு நாள் இடம்பெயர்ந்து வருவது அதிகரித்து வருகிறது. இலங்கையில் அதிகரித்து வரும் விலைவாசி, உணவு பற்றாக்குறை போன்ற பல காரணங்களால், பலர் தங்களது வாழ வழியின்றி தவித்து வருகின்றனர். இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி, பலர் வாழ வழியின்றி, தங்களை காத்துக் கொள்ளும் வகையில், தமிழகத்திற்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பலர் குடும்பம் குடும்பமாக இலங்கையில் இருந்து கடல் வழியாக படகுகளில் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

ஏற்கனவே இலங்கையில் இருந்து 150 நபர்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட எட்டு பேர்கள் ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்து மர்ம படகில் ஆபத்தான முறையில் பயணம் செய்து ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி ஒன்றாம் மணல் தீடை பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளதாக கடலோர காவல் குழுமம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

மேலும் படிக்க | சீன உதவியை விட இந்திய உதவிகளே எமக்கு அதிகம் கிடைத்துள்ளது: மீனவ கூட்டுறவு சங்க செயலாளர்

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை மீட்டு விசாரணை நடத்தியதில், அவர்கள் மன்னார், தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று பின்னர் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

மேலும் படிக்க | Emergency Aid: இலங்கைக்கு 25 மில்லியன் டாலர் அவசரகால கடனுதவி தரும் ஆஸ்திரேலியா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News