எஸ்.ஆர்.எம் குழும தலைவர் பாரிவேந்தர் மோசடி வழக்கில் கைது
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவருமான பாரிவேந்தர் இன்று சென்னை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வேந்தர் மூவிஸ் என்ற பெயரில் படநிறுவனம் நடத்தி வந்த பிரபல சினிமா தயாரிப்பாளரான மதன் சமீபத்தில் மாயமானார். இவரை கண்டு பிடித்து தருமாறு சென்னை ஐகோர்ட்டில் அவரது பெற்றோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த கோர்ட் மதனுக்கு நெருக்கமான பாரிவேந்தரிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை என கேள்வி எழுப்பியது. இதன் படி நேற்று இரவு முதல் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் தற்போது பச்சமுத்துவை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் மோசடி செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.