SSLC பொதுத் தேர்வு நிறைவு: ஏப்.24-இல் விடைத்தாள் திருத்தம்!!
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வெள்ளிக்கிழமை நிறைவடைந்ததையடுத்து ஏப்.24-ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கவுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் 2017-2018-ஆம் கல்வி ஆண்டுக்கான அரசு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 16-ஆம் தேதி தொடங்கியது.
இதில், பிளஸ்-2, பிளஸ்-1 தேர்வுகள் கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கி முடிவடைந்தது.
இந்த பிளஸ்-2 தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 792 மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர்.
இதேபோன்று மார்ச் 7-ந்தேதி தொடங்கிய பிளஸ்-1 தேர்வினை 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர்.
இதை தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மார்ச் மாதம் 16-ந்தேதி தொடங்கியது. மொத்தம் 3,603 மையங்களில் 10 லட்சத்து 1,140 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர்.
ஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தேர்வு எழுதி முடித்துவிட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்.
இதில், கணிதத் தேர்வு சற்று கடினமாக இருந்ததாகவும், சமூக அறிவியல் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, வரும் (ஏப்.24) முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்கான, தேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி வெளியிடப்படும் என்றும் அதில் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த மாதம் 16-ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகளும், 23-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளும், 30-ந்தேதி பிளஸ்-1 தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.