வாரிசு என்பதால் மட்டுமே ஸ்டாலின் பதவிக்குவரவில்லை, அடிப்படை தொண்டனாக இருந்து பதவிக்கு வந்தவர் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்....! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவினை அடுத்து தற்போது திமுக-வின் தலைவருக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் பொருப்பிற்கு MK ஸ்டாலின் அவர்கள் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார்.


65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார் ஸ்டாலின். அவரது வேட்புமனுவினை சென்னை அறிவாலயத்தில், திமுக அமைப்பு செயலாளர் RS பாரதி அவர்கள் பெற்றுக்கொண்டார்.


அதேவேலையில் திமுக-வின் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் அவர்களும் வேட்புமனை தாக்கல் செய்தார். தலைவர் பதவிக்கு வேறுயாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றால், ஒருமனதாக ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அதேப்போல் பொருளாளர் பதவிக்கு வேறுயாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றால், ஒருமனதாக துரை முருகன் அவர்கள் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.


இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தவதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில் MK ஸ்டாலின், திமுக-வின் தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் என தெரிவத்தனர்.


இந்நிலையில், நெல்லை பாளையங்கோட்டையில் திமுக தலைவர் கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், கருணாநிதியின் வாரிசு என்பதால் மட்டுமே ஸ்டாலின் பதவிக்குவரவில்லை, அடிப்படை தொண்டனாக இருந்து பதவிக்கு வந்தவர். கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக பிரதிநிதி கண்டிப்பாக பங்கேற்பார். நடக்க முடியாததையும் நடத்திக் காண்பிப்பவர் தான் திமுக தலைவர் கருணாநிதி.